ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ரன்னிங் டைம் இதுதான்!

Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ரன்னிங் டைம் இதுதான்!

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் முதல் பாகம் 2 மணி நேரம் 46 நிமிடஙகள் ஓடும் 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் 2 மணி நேரம் 46 நிமிடங்கள் ஓடும் என தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இந்த திரைப்படத்தை பிரபலப்படுத்தும் வேலையில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக சென்னை, திருவனந்தபுரம்,  பெங்களூர், ஹைதராபாத், மும்பை ஆகிய இடங்களில் படத்தை பிரபலப்படுத்திய குழுவினர், தற்போது டெல்லி சென்றுள்ளனர்.  அங்கு செய்தியாளர்களை சந்தித்து படம் குறித்த பல்வேறு விஷயங்களை பகிர உள்ளனர்.  பொன்னியின் செல்வன் படத்தை பிரபலப்படுத்தும் பணிகள் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வந்தாலும், படத்தை வெளியிடுவது,  திரையரங்குகளை ஒப்பந்தம் செய்வது,  முன்பதிவு ஆகிய வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிறைநிலவு மறையும் முன்னே முழுநிலவாய் வந்து நிற்பார் - ஐஸ்வர்யா ராயை பாராட்டிய பார்த்திபன்!

இந்த நிலையில் பொன்னின் செல்வன் படத்தின் முதல் பாகம் 2 மணி நேரம் 46 நிமிடம் ஓடும் என தகவல் வெளியாகி உள்ளது. அதில் முதல் பாதி ஒரு மணி நேரம் 21 நிமிடமும், இரண்டாம் பாதி ஒரு மணி நேரம் 25 நிமிடமும் போடும் வகையில் படத்தை உருவாக்கி இருக்கிறார் மணிரத்னம். இந்தப் படத்தின் நேரம் இரண்டு மணி நேரம் 46 நிமிடமாக இருந்தாலும்,  ஒவ்வொரு நிமிடமும் சுவாரசியமாக நகரும் வகையில் திரைக்கதை இருக்கும் என பட குழுவினர் கூறுகின்றனர்.

Published by:Shalini C
First published:

Tags: Actor Vikram, Mani ratnam, Ponniyin selvan