Home /News /entertainment /

Ponniyin Selvan: பெரும் தொகைக்கு விற்கப்பட்ட பொன்னியின் செல்வன் டிஜிட்டல் உரிமம்!

Ponniyin Selvan: பெரும் தொகைக்கு விற்கப்பட்ட பொன்னியின் செல்வன் டிஜிட்டல் உரிமம்!

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகமான 'பி.எஸ் 1' செப்டம்பர் 30 ஆம் தேதி ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பொன்னியின் செல்வன் படத்தின் டிஜிட்டல் உரிமம் நல்ல விலைக்கு விற்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இன்னும் சில தினங்களில் திரைக்கு வர உள்ளது. ரசிகர்கள் அதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். தற்போது 'பொன்னியின் செல்வன்' டிஜிட்டல் உரிமை அமோக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அதாவது, 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாகங்களும் ஒட்டுமொத்தமாக பிரபல OTT தளத்திற்கு ரூ 125 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    படத்தின் சாட்டிலைட் உரிமையும் பெரும் தொகைக்கு விற்கப்பட்டுள்ளது, மேலும் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை, படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்னதாகவே டிவி-யில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர்.

     



    'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகமான 'பி.எஸ் 1' செப்டம்பர் 30 ஆம் தேதி ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இந்த மெகா வரலாற்று படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல ஓபனிங்கை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அந்தந்த மண்டலங்களின் விநியோகஸ்தர்களை தயாரிப்பாளர்கள் அறிவித்தனர். அதோடு படத்தை விளம்பரப்படுத்த உலகம் முழுவதும் பயணம் செய்ய தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    ரஜினி, விஜய், அஜித்... என முன்னணி நடிகர்களுடன் திரையில் வடிவேலு நிகழ்த்திய மேஜிக்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' படம் சோழர்களின் வரலாற்றை விளக்கும் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டது. இதில் ஜெயம் ரவி, சியான் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஜெயராம், பிரபு மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Ponniyin selvan

    அடுத்த செய்தி