பொன்னியின் செல்வனான ராஜ ராஜசோழனின் பெயர் அருள்மொழி வர்மனா அல்லது அருண்மொழி வர்மனா என்ற சர்ச்சை ஏற்பட்ட நிலையில் அதுகுறித்து படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.
கல்கி எழுதிய வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன், மணிரத்னத்தின் இயக்கத்தில் திரைப்படமாக உருவாகியுள்ளது. முன்னதாக இந்த நாவலை திரைப்படமாக உருவாக்குவதற்கு எம்ஜிஆர், கமல்ஹாசன் உள்ளிட்டோர் முயற்சி மேற்கொண்டு தோல்வி அடைந்தனர்.
1990களில் இதற்கான முயற்சியை மணிரத்னம் மேற்கொண்டு, பின்னர் அதனை கைவிட்டார். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு படத்தின் டீசர் கடந்த 9-ம்தேதி வெளியிடப்பட்டது.
5 மொழிகளில் வெளியான இந்த டீசருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கிடையே பொன்னியின் செல்வனாக நடித்திருக்கும் ஜெயம் ரவியின் கேரக்டரை அருண் மொழி வர்மன் என்று படக்குழுவினர் குறிப்பிட்டிருந்தனர்.
பிரபலமான 10 இந்திய நடிகைகள் பட்டியல் வெளியீடு… முதலிடத்தில் சமந்தா... ராஷ்மிகாவுக்கு இடமில்லை
ஆனால் ராஜ ராஜ சோழனின் பெயர் அருள் மொழி என்றும், வரலாற்றை படக்குழு தவறாக பதிவு செய்வதாகவும் சர்ச்சைகள் எழுந்தன.
அதே நேரம் இலக்கண விதிப்படி அருள்மொழி வர்மன் என்ற பெயரை, அருண்மொழி வர்மன் என்று எழுதுவது தான் சரி என மொழியியலாளர்கள் கூறியிருந்தனர்.
இந்நிலையில் அருண் மொழியா, அருள்மொழியா என்பது குறித்து விளக்கம் அளித்து படக்குழுவினர் இன்று வீடியோ வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக ஆதித்த கரிகாலன் நடித்திருக்கும் விக்ரம் நெற்றியில் வெற்றித் திலகம் இடப்பட்ட போஸ்டர் வெளிவந்தது. இதனை நாமம் என்று நெட்டிசன்கள் சிலர் கூறி சர்ச்சையை கிளப்பி இருந்தனர்.
இதேபோன்று த்ரிஷாவின் உடையும் சர்ச்சைக்குள்ளானது. இது தமிழ்நாட்டு பாரம்பரியம் தானா என்று முன்பு த்ரிஷாவின் போஸ்டர் வெளிவந்தபோது விமர்சனங்கள் எழுந்தன.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30-ம்தேதி திரைக்கு வரவுள்ளது. இதில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஷ்வர்யா ராய், சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜ், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.