ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிரபலங்களின் பார்வையில் பொன்னியின் செல்வன்.. படத்தை பற்றி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!

பிரபலங்களின் பார்வையில் பொன்னியின் செல்வன்.. படத்தை பற்றி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் முதல் பாகம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  உலகம் முழுவதையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது பொன்னியின் செல்வன் ரிலீஸ்.கல்கி எழுதிய நாவலை படமாக எடுக்க பல பிரபலங்கள் முயற்சி செய்தனர். எம்.ஜி.ஆர், கமல், சிவாஜி என இவர்கள் அனைவரும் கண்ட கனவை இன்று நனவாக்கியுள்ளார் இயக்குனர் மணிரத்னம். ஆரம்பத்தில் இதுக் குறித்த தகவல்கள் வெளியான போது பலரும் இது சாத்தியமா? என கேள்வி எழுப்பினர். ஆனால் இன்று மல்டி ஸ்டார்களை வைத்து பிரம்மாண்டத்தின் உச்சமாக பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகமாக எடுத்துள்ளார் மணிரத்னம்.

  முதல் பாகம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பாசிட்டிவான கமெண்டுகளை சமூகவலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அதே போல் விமர்சனம் ரீதியாகவும் படம் வெற்றி என தகவல்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகின்றனர். கண்டிப்பாக சோழர்களின் வரலாற்றை படம் கண்முன் நிறுத்துவதாக பலரும் கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமில்லை சினிமா பிரபலங்களும் பொன்னியின் செல்வன் படத்தை திரையில் பார்க்க ஆவலாக உள்ளனர். இந்நிலையில் படம் குறித்தும், அதன் எதிர்பார்ப்பு குறித்து பிரபலங்கள் ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் பதிவுகளின் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.

  ' isDesktop="true" id="811133" youtubeid="kT7XMkoxEfo" category="cinema">

  நடிகர் சிவகார்த்திகேயன்:

  நடிகர் சிவகார்த்திகேயன் ஒட்டுமொத்த பொன்னியின் செல்வன் படக்குழுவுக்கும் தனது வாழ்த்துக்களை கூறிவிட்டு படம் பார்க்க ஆவலாக இருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

  ரமேஷ் பாலா:

  ஃபிலிம் அனாலிஸ்ட்டான ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் மணிரத்னத்தால் மட்டுமே இது சாத்தியம் என பூரிப்புடன் ட்வீட் செய்துள்ளார்.

  நடிகர் கெளதம் கார்த்திக்:

  மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆன கெளதம் கார்த்திக் தனது குரு மணிரத்னத்துக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் - மணிரத்னம் மேஜிக்கை பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

  The DREAM project of Tamil cinema is finally coming to theaters!

  Wishing my guru #ManiRatnam sir, Isaipuyal @arrahman sir and the entire team of #PonniyinSelvan a historic success!

  😊@MadrasTalkies_ @chiyaan @actor_jayamravi @Karthi_Offl @trishtrashers #PS1 #CholasAreComing

  — Gautham Karthik (@Gautham_Karthik) September 29, 2022

  நடிகர் சூர்யா:

  நடிகர் சூர்யாவின் தம்பியும் நடிகருமான கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார். அவரின் சர்கார் படத்தின் டீசரும் நேற்று வெளியாகியது. இந்த  இரண்டுக்கும் சேர்த்து சூர்யா தனது ட்வீட்டில் கார்த்திக்கு  வாழ்த்து கூறியுள்ளார். மேலும் பொன்னியின் செல்வன் படக்குழுவுக்கும் தனது வாழ்த்துக்களை பரிமாறியுள்ளார்.

  பிரபல தயாரிப்பாளர் நிறுவனமாக 7 ஸ்கிரீன் ஸ்டியோ  படக்குழுவுக்கு வாழ்த்துக்களை கூறுவதோடு நன்றி கூற விரும்புகிறோம் என தெரிவித்துள்ளது.   பொன்னியின் செல்வனை திரைக்கு கொண்டு வந்ததற்கு நன்றி என ட்வீட்செய்துள்ளது.

  அர்ச்சனா கல்பாதி:

  மெர்சல் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதியும்  பொன்னியின் செல்வன்  படக்குழுவுக்கு தங்களது பாராட்டுக்களை கூறியுள்ளார்.

  நடிகை வரலட்சுமி சரத்குமார்:

  படத்தை பார்க்க ஆவலுடன் இருப்பதாக ட்வீட் செய்துள்ளார்.

  விக்னேஷ் சிவன்:

  இயக்குனர் விக்னேஷ் சிவன், தமிழ் ரசிகர்கள்,  உலக மக்கள் அனைவரும் தியேட்டரில் படத்தை பார்த்து பெருமையாக உணர்வார்கள்.. கண்டிப்பாக இந்த சரித்திரத்தை தியேட்டர்களில் பாருங்கள் என கூறியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Actor Karthi, Actor Vikram, Actress Trisha, AR Rahman, Mani rathnam, Ponniyin selvan