ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

முன்னணி நடிகர்களின் வசூல் சாதனையை முறியடித்த பொன்னியின் செல்வன்!

முன்னணி நடிகர்களின் வசூல் சாதனையை முறியடித்த பொன்னியின் செல்வன்!

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடைய சாதனையை முறியடித்த பொன்னியின் செல்வன்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழகத்தில் பல முன்னணி நடிகர்களின் சாதனைகளை முறியடித்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன். முதல் நாளிலிருந்து இந்த திரைப்படம் வசூலில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் தமிழகத்தில் முதல் நாள் 21 கோடி ரூபாய் வசூல் செய்தது. இதற்குப் பிறகு ஒவ்வொரு நாளும் சுமார் 20 கோடி ரூபாயை நெருங்கி வசூல் செய்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் மட்டும் 6 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இதற்கு முன் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் மற்றும் மாஸ்டர் திரைப்படங்கள் 7 நாட்களில் 100 கோடி வசூல் செய்தது. அடுத்ததாக கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் 8 நாளில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்தது. அந்தப் படங்களின் சாதனையை தற்போது பொன்னியின் செல்வன் முறியடித்துள்ளது.

தமிழகத்தில் ரஜினிகாந்த், விஜய், அஜித், கமல்ஹாசன் ஆகியோர் படங்கள் 100 கோடி ரூபாய் வசூலை சாத்தியமாக்கி இருந்தன. இந்த நிலையில் முதல் ஐந்து இடங்களில் உள்ள முன்னணி நடிகர்கள், நடிக்காத ஒரு படம் 100 கோடி ரூபாய் வசூலை தமிழகத்தில் சாத்தியமாக்கி உள்ளது.

ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் இல்லை - வெற்றிமாறன் கருத்துக்கு கமல்ஹாசன் மறைமுக ஆதரவு

தமிழகம் மட்டுமல்லாமல் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் பொன்னியின் செல்வன் பெரும் வசூலை ஈட்டி உள்ளது. இதன் காரணமாக உலக அளவில் 300 கோடி ரூபாய் வசூல் என்ற இலக்கை நோக்கி பொன்னியின் செல்வன் திரைப்படம் பயணித்துக் கொண்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு தமிழகத்தில் பெரும் வரவேற்பு இருப்பதால் இந்த வாரம் வெளியாகவிருந்த சுந்தர்.சி-யின் காபி வித் காதல் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனவே, தீபாவளி பண்டிகை வரை பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரும் வசூலை எடுக்கும் என தெரிவிக்கின்றனர். தீபாவளிக்கு ஒரு திரைப்படம் மட்டும் வெளியானால், பொன்னியின் செல்வன் திரைப்படம் நிச்சயம் 200 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் என்று சினிமா துறையில் கூறுகின்றனர்.

Published by:Shalini C
First published:

Tags: Ponniyin selvan