ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

3 நாட்களில் இமாலய வசூல்! உலகளவில் சீறும் பொன்னியின் செல்வன்! அதிகாரப்பூர்வ வசூல் நிலவரம்!

3 நாட்களில் இமாலய வசூல்! உலகளவில் சீறும் பொன்னியின் செல்வன்! அதிகாரப்பூர்வ வசூல் நிலவரம்!

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

Ponniyin Selvan | பொன்னியின் செல்வன் வெளியாகி 3 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக குறிப்பிட்டுள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் வெளியாகி 3 நாட்களில் 200 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமான தெரிவித்துள்ளது

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியானது. பிரபலமான நாவலின் திரை வடிவம் என்பதால் பொன்னியின் செல்வனுக்கு எதிர்பார்ப்பு எகிறியது. அதேபோல் மணி ரத்னத்தின் இயக்கம், ஏ.ஆர். ரகுமானின் இசை, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஷ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட பல சினிமா பட்டாளம் என நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்தது. தொடங்கியது முதலே பரபரவென ஷூட்டிங் சென்ற நிலையில் வெறும் 150 நாட்களில் படத்தை எடுத்து முடித்து திரைக்கு கொண்டு வந்தார் மணி ரத்னம். படத்தின் ரிலீஸ் நெருங்க நெருங்க விளம்பரப்படுத்துவதிலும் படக்குழு கவனத்தை செலுத்தியது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த படத்தின் புரொமோஷனுக்காக இயக்குனர் மணி ரத்னம், ஏ.ஆர். ரகுமான், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஷ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் பல்வேறு நகரங்களுக்கு சென்று படத்தை பிரபலப்படுத்தினர்.

இந்நிலையில் படம் வெளியான முதல் நாளன்று பொன்னியின் செல்வன் ரூ. 80 கோடி வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது 2 நாட்களில் இந்த படத்தின் வசூல் ரூ. 150 கோடியை தாண்டியிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் படம் வெளியாகி 3 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் படம் உலகளவில் மொத்தமாக ரூ.200கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக நாடுகளிலும் பொன்னியின் செல்வன் ஹவுஸ் புல் ஷோவாக ஓடிக்கொண்டிருக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் வழக்கமாக இல்லாத அளவுக்கு வசூலை வாரிக்குவித்து வருகிறது பொன்னியின் செல்வன்.

First published:

Tags: Ponniyin selvan