ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Ponniyin Selvan Box Office Collection: 500 கோடி வசூலை கடந்த பொன்னியின் செல்வன்!

Ponniyin Selvan Box Office Collection: 500 கோடி வசூலை கடந்த பொன்னியின் செல்வன்!

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

'பொன்னியின் செல்வன்' படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. முதல் பாகமே படத்தின் பட்ஜெட்டை வசூலித்து அதிக லாபம் ஈட்டிய படமாக மாற்றியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகளவில் 500 கோடிகளை கடந்துள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன் 1' தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது. படம் வெளியாகி ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இன்னும் பல திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. புதிய படங்கள் வெளியானபோதிலும் படத்திற்கான தொடர்ச்சியான வரவேற்பு கொஞ்சம் கூட குறையவில்லை. இதற்கிடையே 'பொன்னியின் செல்வன் 1' அதன் 32 வது நாள் முடிவில் உலகளவில் ரூ.500 கோடி வசூலை எட்டியுள்ளது. மேலும் இது ரஜினிகாந்த் - ஷங்கரின் '2.O' படத்திற்குப் பிறகு வசூல் சாதனை படைத்த இரண்டாவது தமிழ் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

    'பொன்னியின் செல்வன் 1' தமிழகத்தில் சுமார் ரூ.230 கோடிகளை வசூலித்து மாநிலத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. அதே நேரத்தில் படத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு வசூல் ரூ.335 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இப்படம் ரூ.500 கோடி வசூல் செய்துள்ள நிலையில், வெளிநாடுகளில் இப்படத்திற்கு கிடைத்த அமோகமான வரவேற்பால், படம் ரூ.170 கோடியை நெருங்கியது.

    'பொன்னியின் செல்வன்' படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. முதல் பாகமே படத்தின் பட்ஜெட்டை வசூலித்து அதிக லாபம் ஈட்டிய படமாக மாற்றியுள்ளது. 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் 2023-ஆம் ஆண்டின் முற்பகுதியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால், முதல் பாகத்தை விட பெரிய அளவில் வெளியாகும்.

    சீரியல் நடிகரின் மனைவி உயிரை பறித்த பேலியோ டயட்... ஊட்டச்சத்து நிபுணர் சொல்வது இதுதான்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    'பொன்னியின் செல்வன்' சோழர்களின் வரலாற்றுக் கதையையும், சோழ மன்னன் அருண்மொழி வர்மன் என்ற பொன்னியின் செல்வனின் வெற்றியையும் விளக்குகிறது. கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய ஐந்து அத்தியாயங்கள் கொண்ட பொன்னியின் செல்வன் நாவலில் இருந்து இந்தப் படம் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Published by:Shalini C
    First published:

    Tags: Mani ratnam, Ponniyin selvan