Home /News /entertainment /

'பொன்னியின் செல்வன்' பாடல் வெளியீட்டு விழா.. ரஜினி, கமலுக்கு அழைப்பு!

'பொன்னியின் செல்வன்' பாடல் வெளியீட்டு விழா.. ரஜினி, கமலுக்கு அழைப்பு!

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள நடிகர்கள் ரஜினிகாந்த - கமல்ஹாசன் ஆகியோருக்கு அழைப்பு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
பொன்னியின் செல்வன் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் ஆகியோர் பங்கேற்க வாய்ப்பு. 

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரோமோஷன் வேலைகளை தற்போது படக் குழுவினர் தொடங்கியுள்ளனர். அதன்படி ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான பொன்னி நதி என்ற பாடலை சிங்கிள் ட்ராக் முறையில் சமீபத்தில் வெளியிட்டனர். அந்தப் பாடலின் தமிழ் பதிப்பு youtube-ல் ஒரு கோடியே 20 லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

Vijay 67 : ஆயுத பூஜைக்கு வெளிவரும் விஜய் படம்!

இந்த நிலையில் அடுத்த வாரம் படத்தின் இரண்டாவது பாடலை வெளியிட உள்ளனர்.  இதைத்தொடர்ந்து சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 6ஆம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை பட குழுவினர் நடத்துகின்றனர்.  அதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரஜினிகாந்த்,  கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

கேள்விக்குறியாகும் லோ பட்ஜெட் படங்களின் நிலை.. திரை துறையினர் வேதனை!

அதில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் நிச்சயம் பங்கு பெறுவார்கள் என பட குழுவினர் தெரிவிக்கின்றனர். மேலும் பாடல் வெளியீட்டு விழாவில் படத்தின் ட்ரெய்லரை வெளியிடவும் திட்டமிட்டிருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sreeja
First published:

Tags: Kamalhaasan, Kollywood, Ponniyin selvan, Rajinikanth, Tamil Cinema

அடுத்த செய்தி