Home /News /entertainment /

பொன்னியின் செல்வன் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

பொன்னியின் செல்வன் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் பாடல் மற்றும் ட்ரெய்லர் வரும் 6-ம் தேதி வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
பொன்னியின் செல்வன் படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வரும் 6-ம் தேதி வெளியாகிறது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்னம் அதே பெயரில் படமாக்கி வருகிறார். அந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. அதில் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி தமிழ் - தெலுங்கு - இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.

இந்த நிலையில் படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் செப்டம்பர் 6-ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியிருந்தது. மேலும் பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு படத்தின் டிரைலர் வெளியிடுவார் என நாம் கூறியிருந்தோம். அதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது பாடல் வெளியீட்டு விழா செப்டம்பர் 6ஆம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறுகிறது என தயாரிப்பு நிறுவனம் லைக்கா அறிவித்திருக்கிறது.

ஜெயிலர் விநாயகர் சிலையை வடிவமைத்த ரஜினி ரசிகர்!



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
Published by:Shalini C
First published:

Tags: Ponniyin selvan

அடுத்த செய்தி