Home /News /entertainment /

ஐஸ்வர்யாவிற்கு எப்படி ஐஸ் வைப்பது? பொன்னியின் செல்வன் விழாவில் பார்த்திபன் கலகல

ஐஸ்வர்யாவிற்கு எப்படி ஐஸ் வைப்பது? பொன்னியின் செல்வன் விழாவில் பார்த்திபன் கலகல

நடிகர் பார்த்திபன்

நடிகர் பார்த்திபன்

Ponniyin Selvan | பொன்னியின் செல்வன் படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து அதே பெயரில் படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லக்‌ஷ்மி, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

    குறிப்பாக ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடித்துள்ளனர். படத்திற்கு இசை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். பொன்னியின் செல்வன் படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த் - கமல் ஹாசன் இருவரும் கலந்துக் கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் போது பேசிய நடிகர் பார்த்திபன், ஹிந்தி நகி மாலுமே, உயிர் தமிழ் ஞானமே என்று தனக்கு உரித்தான ஸ்டைலில் பேச ஆரம்பித்தார்.

    கல்கி கனவை கலக்கியிருக்கிறார் மணிரத்னம். இந்தப் படத்தில் நான் நடித்திருப்பது சிறிய கதாபாத்திரம் தான். மணிரத்னத்திற்கு லவ் இல்லாம இவ்வளவு அழகா இந்தப் படத்தை பண்ணிருக்க முடியாது. நடிக்கவே தெரியாதவர்கள் மணிரத்னம் படத்திற்கு போனால் கூட நடித்துவிடுவார்கள். எல்லோருக்கும் ஐஸ் வெச்சாச்சு. ஐஸ்வர்யாவிற்கு என்ன வைப்பது. மொழியே தெரியாமல் சிறப்பான நடிப்பை வெளிப்படித்தினார். அவரின் நடிப்பை பார்த்து பிரமிப்படைந்தேன் என்று நடிகர் பார்த்திபன் பேசினார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Ponniyin selvan

    அடுத்த செய்தி