Home /News /entertainment /

Ponniyin Selvan: விறுவிறுப்பாக நடக்கும் பொன்னியின் செல்வன் வியாபாரம்!

Ponniyin Selvan: விறுவிறுப்பாக நடக்கும் பொன்னியின் செல்வன் வியாபாரம்!

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கர்நாடகா உரிமையை செந்தில் என்பவர் கைப்பற்றியுள்ளார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான ஆந்திரா மற்றும் கர்நாடக வெளியீட்டு உரிமை விற்பனையாக்கி உள்ளது.

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இதைத் தொடர்ந்து படத்தின் வியாபார பணியை லைகா நிறுவனம் தொடங்கியுள்ளது. அதில் முதல் கட்டமாக வெளிநாட்டு விநியோக உரிமைகளை பெரும் தொகைக்கு விற்பனை செய்தது.

இந்த நிலையில் தற்போது இந்திய வியாபாரத்திற்கான பணிகளை லைகா நிறுவனம் தொடங்கியுள்ளது. அதில் முதல் கட்டமாக கர்நாடகா மற்றும் ஆந்திரா வியாபாரத்தை முடித்துள்ளனர். குறிப்பாக கர்நாடகா உரிமையை கே.செந்தில் என்பவர் பெற்றுள்ளார். அதேபோல் ஆந்திரா மற்றும் தெலுங்கானா உரிமையை வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு ஏற்கனவே கைப்பற்றினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தனி விமானத்தில் மகாலட்சுமியுடன் ஹனிமூன் ட்ரிப்? வைரலாகும் ரவீந்தர் பதிவு

இன்னும் தமிழ்நாடு, கேரளா மற்றும் வட இந்தியா விநியோக உரிமங்கள் இறுதியாகாமல் உள்ளன. அதுவும் இன்னும் ஓரிரு தினங்களில் முடிந்து திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 
Published by:Shalini C
First published:

Tags: Ponniyin selvan

அடுத்த செய்தி