ஆடுகளம், பொல்லாதவன், வம்சம், ஜெயம்கொண்டான் போன்ற பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்தவர் கிஷோர். கர்நாடகாவைச் சேர்ந்த இவர், தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளிலும் நடித்துவருகிறார். கடந்த வருடம் மட்டும் இவரது நடிப்பில் தமிழில் பொன்னியின் செல்வன் படமும் கன்னடத்தில் காந்தாரா படமும் வெளியாகி தேசிய அளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றன. பொன்னியின் செல்வன் படத்தில் ரவிதாசன் என்ற மந்திரவாதியாக மிரட்டினார் கிஷோர். வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் இரண்டாம் பாகத்திலும் சோழ தேசத்தில் ரவிதாஸனாக ஆதிக்கம் செலுத்த காத்திருக்கிறார்.
கன்னடத்தில் சிறிய படமாக உருவான காந்தாரா படமும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் படத்தில் ஃபாரஸ்ட் ஆபிசராக நடித்ததன் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றிருக்கிறார் கிஷோர். இந்த நிலையில் கேஜிஎஃப் 2 படம் குறித்து இவர் பேசியிருப்பது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஒரு பேட்டியில் இதுதொடர்பாக பேசிய அவர், ''இந்தப் படத்தில் லாஜிக் இல்லாத கேஜிஎஃப் 2 போன்ற படங்கள் எனக்கு பிடிக்காது. அதற்கு பதில் நல்ல கதையம்சம் கொண்ட சிறிய படங்களை ஆதரிக்கலாம் என்று நினைப்பேன்.
நான் சொல்வது சரியா? தவறா? என தெரியவில்லை. நான் இதுவரை கேஜிஎஃப் 2 படத்தைப் பார்க்கவில்லை. எனக்கு அந்த மாதிரியான படங்கள் பிடிக்காது. இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். அதற்கு பதில் சீரியசான விஷயங்களை பேசக் கூடிய சிறிய படங்களைப் பார்ப்பேன் என்றார். இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பரில், பேட்டி ஒன்றில் நிருபர் தவறுதலாக நடிகர் யஷ்ஷிடம், உங்கள் படம் என காந்தாராவைக் குறிப்பிட்டு பின்னர் கன்னட திரைப்படம் என்றார். அப்போது குறுக்கிட்ட யஷ், காந்தாராவும் எனது படம்தான் என்றார் பெருமையாக.
தமிழ், தெலுங்கு, மலையாளம் போல் அல்லாமல் கன்னட திரைப்படங்கள் பெரும்பாலும் மற்ற மொழிகளில் அதிகம் கவனம் பெறாமல் இருந்துவந்தது. மற்றமொழி படங்களே கர்நாடகாவில் ஆதிக்கம் செலுத்திவந்தன. மேலும் கன்னட நடிகர்கள் அதிகம் ரீமேக் படங்களில் நடித்துவந்ததும் அதற்கு ஒரு காரணம். கேஜிஎஃப் படத்துக்கு பிறகு அந்த நிலை மாறியிருக்கிறது. கேஜிஎஃப் 2 மற்றும் காந்தாரா படங்கள் தேசிய அளவில் அதிக வசூலித்த படங்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது. முன்னதாக கடந்த சில ஆண்டுகளாக லூசியா, யூ டர்ன் போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களும் அங்கு வெளியாகிவருகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: KGF 2, Ponniyin selvan