ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்துவிட்டு மிக எளிமையாக இருக்கிறார் மணிரத்னம்’ – ஜெயம் ரவி புகழாரம்

‘இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்துவிட்டு மிக எளிமையாக இருக்கிறார் மணிரத்னம்’ – ஜெயம் ரவி புகழாரம்

பொன்னியின் செல்வன் சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி, மணிரத்னம்

பொன்னியின் செல்வன் சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி, மணிரத்னம்

பொன்னியின் செல்வன் உலக அளவில் 500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. அதில் தமிழகத்தில் மட்டும் 234 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் வெற்றியை எப்படி கொண்டாடுவது என்றே தெரியவில்லை.  அந்த அளவிற்கு சந்தோசமாக இருக்கிறது. இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்துவிட்டு மிக எளிமையாக இருக்கிறார் மணிரத்னம் என ஜெயம் ரவி பேசியுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, உள்ளிட்டோர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது.  இந்த திரைப்படம் உலக அளவில் 500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

அதில் தமிழகத்தில் மட்டும் 234 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படக்குழுவினர் ரசிகர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.  இதற்கான விழா சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, இயக்குனர் மணிரத்னம்,  தயாரிப்பாளர் சுபாஷ் கரன், தமிழ் குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

WATCH – வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘ரஞ்சிதமே’ பாடல்…

அதில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, பொன்னியின் செல்வன் வெற்றியை எப்படி கொண்டாடுவது என்றே தெரியவில்லை.  அந்த அளவிற்கு சந்தோசமாக இருக்கிறது. இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்துவிட்டு மிக எளிமையாக இருக்கிறார் மணிரத்னம் என தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும்! என்ன செய்வது என்று தெரியவில்லை! விரைவில் சொல்கிறேன் எனவும் தெரிவித்தார்.

பொன்னியின் செல்வன் படத்தில் கதையின் நாயகன் ராஜராஜ சோழன் என்கிற அருள்மொழி வர்மன் கேரக்டரில் ஜெயம் ரவி நடித்துள்ளார். அறிவுக்கூர்மை, வீரம், கம்பீரத் தோற்றம் என பல அம்சங்களையும் உள்ளடக்கியதாக ஜெயம் ரவியின் நடிப்பு இந்த படத்தில் பாராட்டும்படி இருந்தது.

கல்கி அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடி நிதியுதவி… பொன்னியின் செல்வன் படக்குழு வழங்கியது…

முதல் பாகம் மிகப்பெரும் வெற்றியை பெற்றுள்ள நிலையில் படத்தின் அடுத்த பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையையொட்டி வெளியாகவுள்ளது.

Published by:Musthak
First published:

Tags: Ponniyin selvan