ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இன்று மாலை வெளியாகும் பொன்னியின் செல்வன் 2 முக்கிய அப்டேட்

இன்று மாலை வெளியாகும் பொன்னியின் செல்வன் 2 முக்கிய அப்டேட்

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

கார்த்தி, சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் 2 படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது. 

இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் 2022-ஆம் ஆண்டில் தமிழ்த் திரையுலகில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாகும். ரசிகர்கள் இப்போது அதன் தொடர்ச்சியின் ரிலீஸுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதையடுத்து இன்று மாலை 4 மணிக்கு படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என்று பொன்னியின் செல்வன் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதற்கிடையே இந்த சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ம் தேதி அன்று பல மொழிகளில் திரைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் தமிழகம் மற்றும் சர்வதேச அளவில் திரையரங்குகளில் அமோகமாக வரவேற்பைப் பெற்றது.

ஐஸ்வர்யா ராய் பச்சன் நடித்த ஊமை ராணியின் கதாபாத்திரத்தை இரண்டாம் பாகத்தில் விரிவாக காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு பொன்னியின் செல்வன் படத்தின் அட்டகாச அப்டேட் வெளியாகும் என லைகா புரொடக்‌ஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

பசங்க பட அன்புவுக்கு கல்யாண வயசாச்சா? பொண்ணு யார் தெரியுமா?

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்ட ஒரு வரலாற்று புனைகதை தான் பொன்னியின் செல்வன் திரைப்படம். இப்படத்தில் கார்த்தி, சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயராம், விக்ரம் பிரபு, சோபிதா துலிபாலா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்திருந்தனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இதன் முதல் பாகம் தற்போது அமேசான் பிரைமில் கிடைக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Ponniyin selvan