ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Ponniyin Selvan: தமிழக பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதலிடம் பிடித்த பொன்னியின் செல்வன்!

Ponniyin Selvan: தமிழக பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதலிடம் பிடித்த பொன்னியின் செல்வன்!

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

ரசிகர்களின் பெரும் வரவேற்புக்கு இடையே பொன்னியின் செல்வன் வசூலை குவித்து வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் தமிழ்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் 200 கோடிக்கு மேல் வசூலித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

  கல்கி எழுதிய வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வனை 2 பாகங்களாக இயக்குனர் மணிரத்தினம் உருவாக்கினார். முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி, வந்தியதேவனாக கார்த்தி, குந்தவையாக திரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யாராய், பூங்குழலியாக ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

  ரசிகர்களின் பெரும் வரவேற்புக்கு இடையே பொன்னியின் செல்வன் வசூலை குவித்து வருகிறது. இதையடுத்து தமிழக பாக்ஸ் ஆபிஸில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை பொன்னியின் செல்வன் 1 பெற்றுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் 460 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. 3-வது வார இறுதி வரை உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் இப்படம் 56 மில்லியன் டாலர் (461 கோடி) வசூலித்துள்ளது. ரஜினிகாந்தின் 2.0-க்குப் பிறகு உலக அளவில் அதிக வசூல் செய்த இரண்டாவது தமிழ் படமாக பொன்னியின் செல்வன் உள்ளது.

  சினிமாவுக்கு குட் பை சொல்லும் அஜித்?

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இன்னும் ஆறு முதல் ஒன்பது மாதங்களில் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்றும், குழு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக இருப்பதாகவும் மணிரத்னம் சமீபத்திய ஊடக உரையாடலில் கூறியிருந்தார். இப்படம் 2023 கோடையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Jayam Ravi, Actor Karthi, Actor Vikram, Actress Trisha, Aishwarya Rai, Ponniyin selvan