முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ponniyin selvan 1 : பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் ரிலீஸ்.. வெளியானது ட்விட்டர் விமர்சனம்!

ponniyin selvan 1 : பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் ரிலீஸ்.. வெளியானது ட்விட்டர் விமர்சனம்!

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

ponniyin selvan 1 review tamil : படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் பல்வேறு கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்

  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. இதுக் குறித்த ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாம்.

பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு உலகளவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பான் இந்தியா படமாக வெளியாகி இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இந்த படத்திற்கு  இசையமைத்துள்ளார். படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் பல்வேறு கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த தொகுப்பை இப்போது இங்கு பார்க்கலாம். :

படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் வெளியிட்டு இருக்கும் இந்த பதிவில் கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் பொன்னியின் செல்வன். மணிரத்னத்தின் ஸ்கிரீன்ப்ளே மிகப் பெரிய பிரம்மாண்டத்தை கண்ணில் காட்டுகிறது. ஏ.ஆர் ரகுமான் இசை இந்த படத்திற்கு தூண் போன்றது. நடிகர்களின் நடிப்பு அபரிவிதமானது என கூறியுள்ளார்.

மற்றொரு ரசிகர் ஒருவர் வெளியிட்டு இருக்கும், பதிவில் 4.75/5 ரேட்டிங் கொடுத்து படத்தின் கிளைமேக்ஸ் வேற லெவலில் இருந்ததாக கூறியுள்ளார்.

படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் தனது தனிப்பட்ட விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். அதில், சோழர்களின் வரலாற்றை மணிரத்னம் கண்முன் நிறுத்துகிறார். கண்டிப்பாக அனைவரும் மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டிய படம் என குறிப்பிட்டுள்ளார்.

படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர் ஒருவர், பொன்னியின் செல்வன் கார்த்தியின் ஒன் மேன் ஷோ என பாராட்டியுள்ளார், விக்ரம் மாஸ், ஐஸ்வர்யா மாயக்காரி, த்ரிஷா இளவரசி என ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ரசித்து ட்விட் செய்துள்ளார்.

' isDesktop="true" id="811069" youtubeid="kT7XMkoxEfo" category="cinema">

படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை ரசித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். படத்தின் விமர்சனத்தை வாவ்!என ஒரே வார்த்தையில் முடித்துள்ளார்.

படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் பூரிப்பில் 70 வருட கனவு இறுதியில் நிறைவேறியது என ட்வீட் செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Karthi, Actor Vikram, Actress Trisha, Kollywood, Mani rathnam, Mani ratnam, Ponniyin selvan, Tamil Cinema