Home /News /entertainment /

பொன்னி நதி பாடல் உருவான விதம்… படக்குழு வெளியிட்ட சுவாரசிய வீடியோ

பொன்னி நதி பாடல் உருவான விதம்… படக்குழு வெளியிட்ட சுவாரசிய வீடியோ

பொன்னி நதி பாடல் படப்பிடிப்பின்போது கார்த்தி.

பொன்னி நதி பாடல் படப்பிடிப்பின்போது கார்த்தி.

பொன்னி நதி பாடல் குறித்து, நடிகர் கார்த்தி மற்றும் நடன இயக்குனர் பிருந்தா ஆகியோர் தங்களது அனுபவங்களை விவரிக்கின்றனர்.

    பொன்னியின் செல்வன் படத்தின் முதல்பாடலான, பொன்னி நதி பாடல் உருவான விதம் குறித்த வீடியோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ அதிக விருப்பங்களை பெற்று வருகிறது.

    மணிரத்தினம் இயக்கத்தில் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் திரைப்படம் 2 பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    படம் வெளியாவதற்கு இன்னும் 57 நாட்களே உள்ள நிலையில் படக்குழுவினர் தங்களது புரமோஷன் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த படத்தில் இருந்து முதல் பாடலாக பொன்னி நதி 2 நாட்களுக்கு முன்பு வெளியாகி மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

    வெளிநாட்டு சுற்றுலாவில் பிஸியாக இருக்கும் விஜய் பட நடிகை…

    இந்த பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து பொன்னி நதி பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் யூடியூபில் அதிக விருப்பங்களை பெற்று வைரலாகியுள்ளது.

    பொன்னி நதி பாடலை பார்க்க...



    யூடியூப் மியூசிக் தளத்தில் பொன்னிநதி பாடல், ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்னாக உள்ளது. தமிழில மட்டும் இந்த பாடல் 10 மில்லியன் பார்வையை கடந்த நிலையில், பாடல் உருவான விதம் குறித்த வீடியோவை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடிகர் கார்த்தி சாமி தரிசனம்…

    இதில் பொன்னி நதி பாடல் குறித்து, நடிகர் கார்த்தி மற்றும் நடன இயக்குனர் பிருந்தா ஆகியோர் தங்களது அனுபவங்களை விவரிக்கின்றனர். இந்த வீடியோ சுவாரசியமாக இருப்பதால் அதிக விருப்பங்கள் இதற்கு கிடைத்துள்ளன.



    பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியதேவனாக கார்த்தி, பொன்னியின் செல்வனாக ஜெயம்ரவி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.

    மொத்தம் 120 நாட்களில் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை படமாக்கியுள்ளார். இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக பொன்னியின் செல்வன் உள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Karthi, Ponniyin selvan

    அடுத்த செய்தி