ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘பொன்னி நதி பாக்கணுமே…’ – முழு வீடியோ பாடல் நாளை வெளியாகிறது…

‘பொன்னி நதி பாக்கணுமே…’ – முழு வீடியோ பாடல் நாளை வெளியாகிறது…

பொன்னி நதி

பொன்னி நதி

பொன்னியின் செல்வன் 2 ஆம் பாகத்திற்கான கிராஃபிக்ஸ் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள பொன்னி நதி பாக்கணுமே முழு வீடியோ பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் படத்தில் இடம்பெறாத காட்சிகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

    பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வரலாறு காணாத வெற்றியை கோலிவுட்டில் பதிவு செய்துள்ள நிலையில் அடுத்த பாகத்திற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

    கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு, அதனை படமாக இயக்குனர் மணிரத்னம் உருவாக்கியுள்ளார். 2 பாகங்களாக பொன்னியின் செல்வன் படமாக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் படப்பிடிப்பை முடித்ததுடன், சினிமா ரசிகர்கள் ரசிக்கும்படியான படத்தை தந்த மணிரத்னம் மற்றும் படக்குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    மனைவி துர்கா கேட்டதற்கு ஷாக்கான முதல்வர் ஸ்டாலின்.. மகன் உதயநிதி சொன்ன கலகல தகவல்!

    இந்த படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக த்ரிஷா, பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், வந்திய தேவனாக கார்த்தி உள்ளிட்டோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

    புடவையின் பேரழகில் நிதி அகர்வால்.. வைரல் போட்டோஸ்..

    முதல் பாகத்தில் இருந்து முதல் பாடலாக பொன்னி நதி பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இதனால், வீடியோ காட்சிகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது.

    ' isDesktop="true" id="836393" youtubeid="Oh5sU8YzF1A" category="cinema">

    இருப்பினும் பொன்னி நதி பாடல் படத்தில் லிரிக்கல் வீடியோவைப் போன்று, முழுமையாக இடம்பெறாமல் இருந்தது. இந்நிலையில் இந்த வீடியோ பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், படத்தில் இடம்பெறாத காட்சிகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். டிப்ஸ் தமிழ் யூடியூப் சேனலில் நாளை காலை 10 மணிக்கு பாடல் வெளியிடப்படுகிறது.

    இதற்கிடையே பொன்னியின் செல்வன் 2 ஆம் பாகத்திற்கான கிராஃபிக்ஸ் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இரண்டாம் பாகத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

    Published by:Musthak
    First published:

    Tags: Ponniyin selvan