மன்னிப்பு கோரிய ‘பொன்மகள் வந்தாள்' பட இயக்குநர் - காரணம் இதுதான்

பொன்மகள் வந்தாள் பட இயக்குநர் ஜே.ஜே.ப்ரெட்ரிக் அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்து மன்னிப்புக் கடிதம் எழுதியுள்ளார்.

மன்னிப்பு கோரிய ‘பொன்மகள் வந்தாள்' பட இயக்குநர் - காரணம் இதுதான்
ஜோதிகாவுக்கு காட்சிகளை விவரிக்கும் இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக்
  • Share this:
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ள படம் பொன்மகள் வந்தாள். இந்தப் படத்தில் பாக்யராஜ், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், தியாகராஜன், பார்த்திபன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், OTT தளமான அமேசானில் இன்று இந்தப்படம் நேரடியாக ரிலீஸ் ஆனது. இதையடுத்து பொன்மகள் வந்தாள் திரைப்படத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குறித்த தவறான சித்தரிப்பு இடம் பெற்றிருப்பதாக புகார் எழுப்பப்பட்டது. அதை தொடர்ந்து இயக்குநர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்துக்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, அதில் " AIDWA அமைப்பின் பெயர் பயன்படுத்தப்பட்டது எங்கள் கவனக் குறைவால் நடந்த ஒன்று. அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. அதற்காக தார்மீகமாய் மன்னிப்புக் கேட்பதோடு AIDWA இயக்கத்தின் பெயரையும் லோகோவையும் உடனடியாக நீக்க உறுதியளக்கிறோம்.


இந்த திரைப்படத்துக்கான கள ஆய்வில் அவர்களின் போராட்டங்களில் இருந்து நிறைய செய்திகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் நாங்கள் நன்றிக் கடன் பட்டுள்ளோம்" என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: Ponmagal Vandhal | பொன்மகள் வந்தாள் - விமர்சனம்




First published: May 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading