Home /News /entertainment /

pongal songs: பொங்கல் அன்று இந்த பாடல்களை மறக்காமல் ஒருமுறை கேட்டு விடுங்கள்!

pongal songs: பொங்கல் அன்று இந்த பாடல்களை மறக்காமல் ஒருமுறை கேட்டு விடுங்கள்!

பொங்கல் சாங்க்ஸ்

பொங்கல் சாங்க்ஸ்

pongal songs : ஒரு ஆட்டம், பாட்டம் வேண்டாமா? கிராமங்களில் மைக் செட் போட்டு நாட்டுப்புற பொங்கல் பாடல்கள், சினிமா குத்து பாடல்கள், பொங்கல் சிறப்பு பாடல்களை போட்டு மொத்த ஊரையும் ஆட வைத்து விடுவார்கள்

    தமிழகம் முழுவது பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை மட்டுமில்லை வேறு எந்த பண்டிகை என்றாலும் தெருக்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் செல்வதை பார்க்கலாம். கோயில், பொழுது போக்கு பூங்காக்கள், தியேட்டர்களுக்கு சென்று அன்றைய நாளை சிறப்பாக கழிப்பார்கள். ஆனால் தற்போது கோரோனா 3வது அலை தீவிரமாக வீசி வருவதால் பல கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. தொற்றில் இருந்து தப்பித்து கொள்ள பெரும்பாலான மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து விட்டு, வீட்டிலே அமைதியான முறையில் பொங்கலை கொண்டாடுகிறார்கள்.

    அது மட்டும் போதுமா? ஒரு ஆட்டம், பாட்டம் வேண்டாமா? கிராமங்களில் மைக் செட் போட்டு நாட்டுப்புற பொங்கல் பாடல்கள், சினிமா குத்து பாடல்கள், பொங்கல் சிறப்பு பாடல்களை போட்டு மொத்த ஊரையும் ஆட வைத்து விடுவார்கள். சென்னையில் அதற்கான வாய்ப்பு குறைவு என்றாலும் கவலை வேண்டாம். வீட்டிலே பொங்கல் பாடல்களை பிளே செய்து கேட்டு மகிழலாம். வீட்டில் குட்டீஸ் இருந்தால் அவர்களையும் ஆட வைக்கலாம். அந்த வகையில் இந்த பொங்கல் அன்று நீங்கள் மிஸ் செய்யக்கூடாத சில பொங்கல் ஸ்பெஷல் பாடல்களை தொகுப்பாக வழங்குகிறோம்.

    இதையும் படிங்க.. விஜய் டிவி சீரியல் உருட்டுகள்.. ஒரு நாள் இரவு போதுமாம் சிலம்பம் கத்துக்க!

    பொங்கலோ பொங்கல்:

    கேபிள் டிவி இருந்த காலக்கட்டத்தில் பொங்கல் திருநாளன்று ஒவ்வொரு சேனல்களிலும் மறக்காமல் பிளே செய்யப்படும் பாடல் மகாநதி திரைப்படத்தில் இடம்பெறும் பொங்கலோ பொங்கல் சாங்க்ஸ் தான். பொங்கல் எனர்ஜியை அப்படியே லைவில் கேட்பது போல் இருக்கும். டிவி சேனல்களில் பொங்கல் புரமோவுக்கு கூட இந்த பாடலை தான் பயன்படுத்துவார்கள். நீங்களும் ஒருமுறை கேளுங்கள்.



    கொம்புல கொம்புல :

    விஜயகாந்த் மகன், சண்முக பாண்டியன் நடித்த மதுரை வீரன் படத்தில் இடம்பெறும் ‘கொம்புல கொம்புல’ பாடல் மாட்டுப் பொங்கலுக்கு போட்டால் தெருவே களைக்கட்டும்.



    சாம கொடாங்கி :

    ஆர்யா நடிப்பில் திரைக்கு வந்த கடம்பன் படத்தில் பொங்கல் விழாவுக்காகவே எடுக்கப்பட்ட பாடல் போல் இருக்கும் சாம கொடாங்கி பாடலை கேட்டால் பொங்கல் கொண்டாடும் எனர்ஜி தானாகவே வந்து விடும்.

    கொம்புல பூவ சுத்தி:

    விரும்பாண்டி படத்தில் வரும் ‘கொம்புல பூவ சுத்தி’ பாடல் ஒவொவ்ரு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியிலும் தவறாமல் ஒலிக்கப்படும்.



    தமிழ்ச் சினிமாவை தவிர, நாட்டுப்புற பாடல்களிலும், கும்மி பாடல்களிலும் ஏகப்பட்ட பொங்கல் பாடல்கள் இருக்கின்றன. டைம் இருந்தால் கண்டிப்பாக கேட்டு பாருங்கள். யூடியூப்பில் சென்று தேடினால் பிளே லிஸ்ட் குவியும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Pongal, Tamil Cinema

    அடுத்த செய்தி