ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பொங்கல் ரேஸில் அஜித்தின் துணிவு vs விஜய்யின் வாரிசு? தியேட்டர் ஓனர்ஸ் ப்ளான் இதுவா?

பொங்கல் ரேஸில் அஜித்தின் துணிவு vs விஜய்யின் வாரிசு? தியேட்டர் ஓனர்ஸ் ப்ளான் இதுவா?

துணிவு - வாரிசு போஸ்டர்கள்

துணிவு - வாரிசு போஸ்டர்கள்

உச்ச நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகும் என்பதால் தியேட்டர் ஓனர்கள்தான் கூடுதல் நெருக்கடிக்கு ஆளாவார்கள்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வரும் பொங்கலையொட்டி அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ படங்கள் திரைக்கு வரும் என்று தகவல்கள் வெளியான நிலையில், அதுபற்றி தியேட்டர் ஓனர்கள் சூப்பர் அப்டேட்டை கொடுத்துள்ளனர்.

  கடந்த 2014 –ஆம் ஆண்டு அஜித்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா படங்கள் பொங்கல் அன்று வெளியாகி, இரு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. இதன் பின்னர் 8 ஆண்டுகளாக இரு உச்ச நடிகர்களிடையே போட்டி ஏற்படாமல் இருந்தது.

  ajith fans celebrates thunivu title and firstlook announcement, thunivu no guts no glory, துணிவு டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீட்டை கொண்டாடிய அஜித் ரசிகர்கள், Ajith ak61 titled as thunivu no guts no glory - Officially announced , Ajith AK61 titled as Thunivu, Thunivu, Thunivu first look poster, துணிவு, துணிவு ஃபர்ஸ்ட்லுக், Ajith ak61 title and first look, AK61, AK61 title, AK61 first look, Boney Kapoor mass update on Ajith AK61 with Stunning image, ak61 movie, ak61 movie update, ajith next movie, Thala Ajith daughter, thala ajith, thala ajith valimai, valimai hd stills, thala ajith movies, valimai images, valimai ajith, அஜித், அஜித் படங்கள், ajith latest images, ajith young look

  இதற்கிடையே விஜய்யின் வாரிசு படம் அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி வெளிவரும் என்று, படத்தின் அறிவிப்பின் போதே தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் அஜித்தின் துணிவு திரைப்படம், தீபாவளியையொட்டி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில காரணங்களுக்காக படப்பிடிப்பை தள்ளிக் கொண்டே போனதால், கடைசியாக படத்தை பொங்கலையொட்டி களத்தில் இறக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

  ஜவான் படத்துக்கு 20 நாட்கள் ஷூட்டிங் பேலன்ஸ்.. ராஜஸ்தான் செல்லும் நயன்தாரா!?

  இதனால் அஜித் - விஜய் படங்களுக்கு இடையே நேரடி போட்டி ஏற்படவுள்ளது. தயாரிப்புக்குழு படத்தை ரிலீஸ் செய்தாலும், உச்ச நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகும் என்பதால் தியேட்டர் ஓனர்கள்தான் கூடுதல் நெருக்கடிக்கு ஆளாவார்கள்.

  Thalapathy Vijay Varisu first single will be a Kuthu song, varisu update, varisu music composition, varisu music, வாரிசு அப்டேட், வாரிசு பாடல்கள், varisu firstlook poster, varisu meaning, varisu meaning in tamil, varisu release date, varisu music director, varisu movie, varisu cast, varisu story, varisu images, vijay varisu bike, varisu bike price, varisu bike details, வாரிசு பைக் விலை, வாரிசு விஜய், thalapathy vijay varisu, thalapathy vijay age, vijay 48, thalapathy vijay, thalapathy vijay birthday, vijay birthday, தளபதி விஜய், விஜய் படங்கள், தளபதி விஜய் பிறந்தநாள், தளபதி விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம், தளபதி விஜய் ரசிகர்கள்,
  நடிகர் விஜய்

  அந்த வகையில் இரு உச்ச நடிகர்களுக்கும் சம அளவு தியேட்டர்கள் பகிர்ந்து அளிக்கப்படுமா என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. இதுகுறித்து சோஷியல் மீடியாக்களில் வெளியான தகவலின்படி, ‘’அஜித்தின் துணிவும், விஜயின் வாரிசும் பொங்கலையொட்டி திரைக்கு வருவது என்பது உறுதியான தகவல்தான். ஜனவரி 12 வியாழனன்று துணிவும், ஜனவரி 13 வெள்ளியன்று வாரிசும் வெளியாகும். இரு படங்களுக்கும் சமமான தியேட்டர்கள் கிடைக்கும். அப்படி பாதி பாதி தியேட்டர்களை ஒதுக்குவதே திட்டமாகவும் உள்ளது. இது ஆரோக்கியமான போட்டிதான்’’ என்று தியேட்டர் ஓனர்கள் கருதுவதாகவும் இது சினிமாவுக்கும் ஆரோக்கியம் என்றும் கூறப்படுகிறது.

  'லேடி நர்ஸ்' வேண்டாம் என்றாரா முத்துராமலிங்க தேவர்? திரைப்பட விழாவில் வாக்குவாதம்!

  பல்வேறு கணிப்புகளை தொடர்ந்து, தற்போது அஜித் - விஜய் படங்கள் பொங்கலையொட்டி வெளியாகும் என்பதை கிட்டத்தட்ட தியேட்டர் தரப்பில் இருந்து சிலர் உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இருவரின் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

  Published by:Musthak
  First published:

  Tags: Actor Vijay, Ajith