Home /News /entertainment /

ஜெய்பீமை தொடர்ந்து மாநாடு படத்திலும் சர்ச்சை!

ஜெய்பீமை தொடர்ந்து மாநாடு படத்திலும் சர்ச்சை!

மாநாடு

மாநாடு

ஜெய் பீம் படம் வெளியாகி பல வாரங்கள் கழித்த பிறகே பிரச்சனை  வெடித்தது. மாநாடுக்கு மறுநாளே ஆரம்பமாகியுள்ளது.

ஜெய் பீம் படத்தில் வரும்  காலண்டர் காட்சி அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  அந்த அலை ஓய்வதற்குள் , எதிர்பார்த்தது போலவே மாநாடு படத்துக்கும் சிக்கல் உருவாகியிருக்கிறது.  

"மாநாடு படம் இந்து - முஸ்லீம் ஒற்றுமையை சீர் குலைக்கும் விதமாக அமைந்துள்ளது. பட விவகாரத்தில் முதலமைச்சர் தலையீடு செய்ய வேண்டும் மற்றும் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட வேண்டும்" என்று மாநில பாஜக சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கூறியுள்ளார்.

மாநாடு படத்தில் சிம்பு இஸ்லாமியராக வருகிறார். அமெரிக்காவில் குண்டு வெடிச்சா தீவிரவாதி என்கிறோம். அதுவே இந்தியான்னா முஸ்லீம் தீவிரவாதிங்கிறோம். தீவிரவாதிக்கு ஏது சாதி, மதம் என்று வசனம் வருகிறது. கடைசிக் காட்சியில் ரயில்வே நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டிருக்கும் பெயர் பலகையை காட்டுகிறார்கள்.

ஜெய் பீம் படம் வெளியாகி பல வாரங்கள் கழித்த பிறகே பிரச்சனை  வெடித்தது. மாநாடுக்கு மறுநாளே ஆரம்பமாகியுள்ளது. மாநாடு படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் என்கிறார்கள். சர்ச்சைகள் என்ன செய்யப்போகிறதோ..?

Also read... தயாரிப்பாளருடன் மாநாடு வெற்றியை கொண்டாடிய சிம்பு...!

மேலும், இந்தக் குற்றச்சாட்டக்கு சிம்புவின் தந்தை டிஆர். அவரது ஸ்டைலில் பதிலளித்தால் படத்துக்கு கூடுதல் விளம்பரமாகkகூட அமையலாம்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Maanaadu

அடுத்த செய்தி