நடிகர் சூர்யாவின் ரியல் அரசியல் சம்பவங்கள்!

சூர்யா

ஏகலைவனின் கட்டைவிரல், நீட் என்பது மனு நீதி தேர்வு போன்ற கடுமையான வார்த்தைகளால் நீட் தேர்வை சூர்யா அறிக்கையில் விமர்சிக்க அது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • News18
  • Last Updated :
  • Share this:
நடிகர் சூர்யா அண்மைக் காலமாக தொடர்ந்து செய்திகளில் அதிகம் அடிபடும் நடிகராக மாறி உள்ளார். அண்மையில் சூர்யாவால் பரபரப்பாக பேசப்பட்ட சில அரசியல் சம்பவங்களின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

2018 - யாரை வெளுக்க சொன்னார் சூர்யா?

2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியான தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில் அனிருத் இசையில் இடம்பெற்றிருந்த சொடுக்கு மேல சொடுக்கு போடுது என்ற பாடலில் இடம் பிடித்திருந்த, "வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது அதிகாரத் திமிர, பணக்காரப்பவர" என இடம் பிடித்த இந்த வரிகளுக்கு அரசியல்வாதிகள் சிலரை சூர்யா ஓட ஓட விரட்டியது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவினர், நீதிமன்றத்தை நாடும் அளவிற்கு இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2019 - கல்விக் கொள்கைக்கு எதிரான கடுமையான குரல்

2019-ம் ஆண்டு நடைபெற்ற அகரம் உதவி வழங்கும் விழாவில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய கல்விக் கொள்கைக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து சூர்யா நீட் தேர்வையும் வார்த்தைகளால் விளாசித் தள்ளினார். மேலும் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தமே நமக்கு எதிரி என சூர்யா பேசிய வார்த்தைகள் தேசிய அரசியல் வரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Actor Suriya opposes Cinematograph Amendment act 2021

2019 - மோடிக்கு கேட்ட சூர்யா குரல்

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக சூர்யா பேசிய கருத்துக்களை ரஜினிகாந்த் பேசி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என காப்பான் இசை வெளியீட்டு விழாவில் கவிஞர் கபிலன் பேச இதை தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த் சூர்யாவின் குரலே பிரதமருக்கு கேட்டு விட்டதாக சூர்யாவை பாராட்டினார்.

2020 - OTT கலாசரத்தை தொடங்கி வைத்த சூர்யா

சூர்யா தயாரிப்பில் Fedrick இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவான பொன்மகள்வந்தாள் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடாமல் நேரடியாக இணையதளத்தில் வெளியிட முடிவை அறிவித்தார் சூர்யா. அதனால் வரை பெரிய நடிகர் நடிகைகள் நடித்த திரைப்படங்கள் நேரடியாக இணையத்தில் வெளியாவது வழக்கத்தில் இல்லாமல் இருந்த சூழலில் புதிய கலாச்சாரத்தை தோற்றுவித்த சூர்யாவிற்கு திரையுலகில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த விவகாரம் சூர்யா ஜோதிகா ஆகியோருக்கு திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டாக எதிர்ப்பு தெரிவிக்கும் அளவிற்கு பூதாகரமாக வளர்ந்தது. திரையரங்க உரிமையாளர்களின் எதிர்ப்பையும் மீறி இணைய தளத்தில் தனது திரைப்படத்தை வெளியிட்டார் சூர்யா.

2020 - தஞ்சை கோவில் - உறுதியாக நின்ற சூர்யா

ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி திரைப்படத்திற்காக விருதினைப் பெற்றுக் கொண்ட நடிகை ஜோதிகா கோயில்களைக் காட்டிலும் மருத்துவமனைகள் பராமரிப்பின்றி இருப்பதாகவும் கோவில்களைப் போல மருத்துவமனைகளையும் பராமரிக்க வேண்டும் என பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்து அமைப்பினர் கோவிலையும் மருத்துவமனையும் ஒப்பிட்டு அதை கடுமையாக கண்டித்தனர். மேலும் ஜோதிகா கோயிலுக்கு செலவு செய்வது போல மருத்துவமனைக்கும் செலவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியதை கோவிலுக்கு செலவு செய்யும் தொகையை மருத்துவமனைகளுக்கு செலவு செய்ய வேண்டும் என தவறாக புரிந்து கொண்டு சூர்யா ஜோதிகா விற்கு எதிராக கண்டனங்களை எழுப்பினர். இந்த விவகாரத்திற்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்ட சூர்யா தங்களது கருத்தில் எந்த குற்றமும் இல்லை என உறுதியாக தெரிவித்ததோடு மன்னிப்பு கேட்கப் போவதில்லை எனவும் அதிரடியாக அறிவித்தார்.

Surprise gift on Suriya birthday to his fans

2020 - வம்பிற்கு செல்ல வேண்டாமென அறிவுரை

தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் சூர்யாவுடன் நடித்த நடிகை மீரா மிதுன் சூர்யாவை தரக்குறைவாக இணையதளங்களில் விமர்சிக்கத் தொடங்கினார். இதற்கு சூர்யாவின் ரசிகர்கள் எதிர்வினையாற்ற, சூர்யா - ஜோதிகா என இருவரையும் மிகவும் மோசமான, தரக்குறைவான வார்த்தைகளில் வசைமாரி பொழிய தொடங்கினார் மீரா மிதுன். மீரா மிதுன் இந்த செயலுக்கு இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்டோர் கண்டன குரல் எழுப்ப பாரதிராஜாவிற்கு நன்றி தெரிவித்த சூர்யா, மீரா மிதுனுக்கு சுர்யா ரசிகர்கள் யாரும் பதிலளித்து நேரத்தை விரயம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தினார்.

2020 - மீண்டும் OTT சர்ச்சை

பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் தயாரிப்பாளராக அந்தத் திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டதற்கு சூர்யா கடுமையான விமர்சனங்களை சந்தித்தபோதும் சூர்யா நடிப்பில் அடுத்து உருவான சூரரைப்போற்று திரைப்படத்தையும் இணையதளத்தில் வெளியிட்டார். இது அவரது ரசிகர்கள் உட்பட திரைத்துறையினர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய போதும் தனது நிலையை அனைவருக்கும் விளக்கிச் சொன்ன சூர்யா, படத்தில் வர்த்தகத்தில் இருந்து 5 கோடி ரூபாயை தேவை உள்ளோருக்கு வழங்க உள்ளதாக அறிவித்தார். சொன்னபடியே நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்கம் என பலருக்கும் லாபத்தில் கிடைத்த தொகையை பங்கும் வைத்தார்.

Also read... யார் இந்த டேன்ஸிங் ரோஸ்? - ’சார்பட்டா பரம்பரை’ படத்தில் அனைவராலும் பாராட்டப்படும் நடிகர்!

2020 - நீட் தேர்வுக்கு எதிரான கடும் விமர்சனம்

2020 ஆம் ஆண்டு நீர் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக தனது எதிர்ப்பை வலுவாக்க பதிவு செய்தார் சூர்யா. ஏகலைவனின் கட்டைவிரல், நீட் என்பது மனு நீதி தேர்வு போன்ற கடுமையான வார்த்தைகளால் நீட் தேர்வை சூர்யா அறிக்கையில் விமர்சிக்க அது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சூர்யாவிற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்த பாஜகவில் உள்ள நடிகர் பாபு கணேஷ் உள்ளிட்ட சிலரும் சூர்யா அரசியலுக்கு வரவேண்டும் என வெளிப்படையாக தெரிவித்தனர்.

soorarai pottru, soorarai pottru suriya, soorarai pottru hindi, suriya soorarai pottru, soorarai pottru hindi remake, sudha kongara, சூரரைப்போற்று, சூரரைப்போற்று இந்தி, சூரரைப்போற்று இந்தி ரீமேக், சூரரைப்போற்று சூர்யா

2021 - மத்திய அரசின் திட்டங்களுக்கு முதல் எதிர்ப்பு குரல்

நீட் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசுக்கு எதிரான சூர்யாவின் குரல் புதிய கல்விக் கொள்கை, வேளாண் திருத்தச்சட்டம், திரைப்படத்தை வெளியான பின்னரும் மத்திய அரசு திரைப் படத்தை சென்சார் செய்ய அனுமதிக்கும் ஒளிப்பதிவாளர் சீர்திருத்த சட்டம் என தொடர்ந்தது இதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் ஆளும் பாஜக அரசின் ஆதரவாளர்களுக்கும் சூர்யா ரசிகர்களுக்கும் இடையே பெரிய வார்த்தை போர் நடைபெற்றது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: