விஜய் பட இயக்குநரிடம் வருத்தம் தெரிவித்த போலீஸ்!

news18
Updated: August 28, 2019, 2:53 PM IST
விஜய் பட இயக்குநரிடம் வருத்தம் தெரிவித்த போலீஸ்!
இயக்குநர் ரமணா
news18
Updated: August 28, 2019, 2:53 PM IST
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன்னிடம் காவலர்கள் நடந்து கொண்ட விதம் குறித்து இயக்குநர் ரமணா ஃபேஸ்புக்கில் எழுதியதைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் அவரிடம் நேரில் வந்து விசாரணை நடத்தி வருத்தம் தெரிவித்துள்ளனர்.

நடிகர் விஜய்யை வைத்து திருமலை, ஆதி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் ரமணா சந்திரசேகர். தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ரமணா, சில நாட்களுக்கு முன்பு காரில் தனது மகளுடன் வந்து கொண்டிருந்த போது தன்னை போக்குவரத்து காவலர்கள் தன்னை அவமரியாதை செய்ததாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். இந்தப் பதிவை ஆயிரத்துக்கும் அதிகமானோர் பகிர்ந்ததால் இந்தச் செய்தி கவனம் பெற்றது.

இந்நிலையில் இயக்குநர் ரமணா தற்போது ஃபேஸ்புக்கில் மற்றொரு பதிவை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,


கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற சொல்லாடலுக்கான பொருளை செயலில் காண்பித்து, நேற்று எனக்கு நேர்ந்த ஒரு கசப்பான சம்பவத்திற்கு, என் முகநூல் பதிவிற்கு, என் உணர்விற்கு மதிப்பளித்து என் பதிவை பகிர்ந்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் அத்தனை முகநூல் நண்பர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடகத்தினருக்கும், எனக்கு ஆறுதலும், துணையும் நின்ற என் நண்பர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

அதன் பலனாக, இன்று முண்ணனி தமிழ் தொலைக்காட்சி செய்திகளிலும், இணையதளத்திலும் பல ஊடக நிறுவனங்கள் எனக்கு நேர்ந்த நிகழ்வை என்னை நேர்காணல் செய்து ஒளிபரப்புசெய்தது.

அதன் விளைவாக இன்று காலை காவல்துறை உயர் அதிகாரிகள் கிருஷ்ணமூர்த்தி ( Asst. Commr of police / Traffic investigation/ East range ), K.ஷோபனா ( Inspector of police / Adayar -Mylapore / Traffic investigation wing / East range ) இருவரும் எந்தன் வீட்டுக்கு வந்து மிகுந்த அக்கறையும் பொறுப்புடனும் நடந்த சம்பவத்தை விசாரித்து நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவித்தார்கள்.

Loading...

மேலும், பெரோஸ் கான் அப்துல்லா ( Deputy commissioner of police/ East Dist . Traffic ) என்னுடன் தொலைபேசியில் பேசி நடந்தவற்றை கேட்டறிந்தார்.

இந்த நேர்மையான காவல்துறையின் விசாரணை நிகழ உதவியாக இருந்த அத்தனை நண்பர்களுக்கும், ஊடகம், மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்” என்று கூறியுள்ளார்.



வீடியோ பார்க்க: அஜித் ரசிகர் எரித்து கொலை.. நண்பர்களே செய்த கொடூர சம்பவம்

First published: August 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...