ரசிகர்கள் நீங்களும் உண்மையான காப்பான் ஆகலாம் - ஐடியா தந்த காவல்துறை உயர் அதிகாரி

ரசிகர்கள் நீங்களும் உண்மையான காப்பான் ஆகலாம் - ஐடியா தந்த காவல்துறை உயர் அதிகாரி
  • News18
  • Last Updated: September 15, 2019, 9:45 AM IST
  • Share this:
திரைப்படம் வெளியாகும் போது கட்அவுட் வைப்பதிற்கு பதிலாக ஹெல்மட் வழங்கினால் உண்மையான காப்பான் ஆகலாம் என்று காவல்துறை அதிகாரி கூறியுள்ளார். 

சூர்யா நடிப்பில் காப்பான் திரைப்படம் வருகிற 20-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் படத்தின் 2-வது டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சூர்யா, அனைவருக்கும் கவலையளிக்கும் விதமாக ஒரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. என்னுடைய ரசிகர்கள், இரத்த தானம் உள்ளிட்ட நல்ல விஷயங்கள் செய்து வருவதை கவனித்து வருகிறேன். படம் வெளியாகும் போது கொண்டாட்டத்தில் ஈடுபடும் ரசிகர்கள் பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும். பேனர்கள் வைத்து தான் என்னை கவனிக்க வைக்க வேண்டும் என்பதில்லை. பேனர் வைக்க வேண்டாம் என நான் அடிக்கடி கூறியிருக்கிறேன். இனிமேலும் அது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.


இதேபோல் 'பிகில்' பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியின் போது பேனர் வைக்க வேண்டாம் என்று நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் எந்தப் பகுதியிலும் அன்றைய தினம் பாடல் வெளியீடு தொடர்பாக பேனர் வைக்கப்படவில்லை என்பதை ரசிகர்களும், மாவட்ட ரசிகர்மன்ற தலைவர்களும் உறுதிப்படுத்த வேண்டும் என விஜய் கேட்டுக்கொண்டுள்ளதாக கூறியுள்ளனர்.

இதேபோல் அஜித் படங்கள் மற்றும் வேறு எந்த நிகழ்விற்கும் பேனர்கள் வைக்க மாட்டோம் என்று மதுரை அஜித் ரசிகள் உறுதிமொழி எடுத்துள்ளனர்.

இந்நிலையில் திருநெல்வேலி காவல்துறை துணை ஆணையர் அர்ஜுன் சரவணன், தனது ட்விட்டர் பக்கத்தில் ‘புதிய திரைப்படம் வெளியாகும் போது பிளக்ஸ் பேனர், கட்அவுட் வைப்பதிற்கு பதிலாக மக்களுக்கும் ரசிகர்களுக்கும் தரமான "ஹெல்மட்" வழங்கினால் அவர்களே உடனடியாக உண்மையான "காப்பான்" ஆக முடியும்’ என்று பதிவிட்டுள்ளார்.


 
First published: September 15, 2019, 9:37 AM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading