ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நடுரோட்டில் அடிதடி! தொகுப்பாளர் மீது வழக்கு பதிவு - தலைமறைவான தொகுப்பாளர்

நடுரோட்டில் அடிதடி! தொகுப்பாளர் மீது வழக்கு பதிவு - தலைமறைவான தொகுப்பாளர்

தொகுப்பாளர் நிக்கி

தொகுப்பாளர் நிக்கி

வாக்குவாதம் முற்றியதில் இருவரும் ஒருவரையொருவர் சாரமாரியாக தாக்கிக்கொண்டிருக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

யூடியூபில் நடிகைகளை பேட்டியெடுத்து அதன் மூலம் பிரபலமானவர் நிக்கி என்கிற நிக்கிலேஷ். இவர் தற்போது தனியார் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக பணியாற்றிவருகிறார். இவர் நேற்றிரவு புரசைவாக்கம் பகுதியில் காரில் சென்றுள்ளார். அப்போது எதிரே தனியார் அலுவலகத்தில் அக்கவுண்டன்ட்டாக பணியாற்றிவரும் ராஜேஷ் என்பவருக்கும் நிக்கிக்கும் வழிவிடுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதில் இருவரும் ஒருவரையொருவர் சாரமாரியாக தாக்கிக்கொண்டிருக்கின்றனர். இதனால் தொகுப்பாளர் நிக்கியின் முகத்திலும் கண் புருவத்திலும் வீக்கம் ஏற்பட்டிருக்கிறது. ராஜேஷுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து வேப்பேரி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதனையடுத்து நிகழ்ச்சி தொகுப்பாளர் நிக்கி மற்றும் அக்கவுண்டன்ட் ராஜேஷ் ஆகிய இருவர் மீதும் ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், காயம் ஏற்படுத்துதல், பிறரை தாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தொகுப்பாளர் நிக்கி தலைமறைவாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

First published:

Tags: Police, Television