விஜயை காண நெய்வேலியில் குவிந்த ரசிகர்கள் - விரட்டியடித்த போலீஸ்!

விஜயை காண நெய்வேலியில் குவிந்த ரசிகர்கள் - விரட்டியடித்த போலீஸ்!
மாஸ்டர்
  • Share this:
மாஸ்டர் படப்பிடிப்பு முடித்து வெளியே வரும் விஜயைக் காண அதிக அளவிலான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் மாஸ்டர். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் நடந்து வருகிறது. சூட்டிங்கில் இருந்த விஜயை வருமான வரித்துறையினர் அழைத்துச் சென்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தியது முதல் மாஸ்டர் களம் பரபரப்பானது.

அதைத்தொடர்ந்து நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியதைக் கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதும் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதேவேளையில் அங்கு படப்பிடிப்புக்கு வரும் விஜயிக் காண ரசிகர்களும் குவிந்து வருகின்றனர்.


இந்நிலையில் இன்று படப்பிடிப்பு முடிந்து வெளியே வரும் விஜயைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்திருந்தனர். ரசிகர்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த திட்டமிட்ட போலீசார் அவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர்.

இதனிடையே மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் பாஜகவினர் போராட்டம் நடத்தியதற்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி கண்டனம் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.



மேலும் படிக்க: விஜய் மட்டுமே தமிழகத்தில் ஷூட்டிங் நடத்துகிறார்... பாஜகவின் போராட்டம் முறையற்றது - ஆர்.கே.செல்வமணி
First published: February 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading