ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சல்மான்கான் பிறந்தநாள்.. அதிகளவில் கூடிய ரசிகர்கள்.. தடியடி நடத்தி அலறவிட்ட போலீஸ்!

சல்மான்கான் பிறந்தநாள்.. அதிகளவில் கூடிய ரசிகர்கள்.. தடியடி நடத்தி அலறவிட்ட போலீஸ்!

சல்மான் கான்

சல்மான் கான்

காலையில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் நடிகர், நடிகைகளான ஷாருக் கான், தபு, பூஜா ஹெக்டே, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mumbai, India

இந்தி நடிகர் சல்மான் கானின் பிறந்த நாளையொட்டி, அவரது இல்லத்தில் அதிக அளவில் ரசிகர்கள் குவிந்ததால் போலீஸார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இந்தி நடிகர் சல்மான் கான், தனது 58-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி, மும்பையில் உள்ள அவரது கேலக்ஸி குடியிருப்பின் முன்பு, ரசிகர்கள் பெருமளவில் கூடினர். இனிப்புகள், டி-சர்ட்களுடனும், மிகப்பெரும் பதாகைகளுடனும் குவிந்தனர்.

வீட்டின் பால்கனியில் தனது தந்தை சலீம் கானுடன் தோன்றிய சல்மான் கான், ரசிகர்களைப் பார்த்து கையசைத்தார். அப்போது, ரசிகர்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு முன்னே செல்ல முயன்றனர். அவர்களைக் கட்டுப்படுத்த போலீஸார் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. இறுதியில், தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

முன்னதாக, காலையில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் நடிகர், நடிகைகளான ஷாருக் கான், கார்த்திக் ஆர்யான், தபு, பூஜா ஹெக்டே, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், பிறந்த நாளையொட்டி வாழ்த்து தெரிவிக்கவந்த ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சல்மான் கான் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

First published:

Tags: Birthday, Fans, Police Lathi Charge, Salman khan