ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய்யின் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் மீது தடியடி - வைரலாகும் பரபரப்பு வீடியோ

விஜய்யின் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் மீது தடியடி - வைரலாகும் பரபரப்பு வீடியோ

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் மீது தடியடி

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் மீது தடியடி

Varisu Vijay முன்னதாக பிகில் இசை வெளியீட்டு விழாவின் போதும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் 'என் மேல் கை வையுங்கள் என் ரசிகர்களை ஒன்றும் செய்யாதீர்கள்' என மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் வருத்தம் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

வாரிசு இசை வெளியீட்டு விழா நுழைவு வாயிலில் ரசிகர்கள் கூட்டமாக நுழைய முயன்றபோது அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் தடியடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

முன்னதாக பிகில் இசை வெளியீட்டு விழாவின் போதும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் 'என் மேல் கை வையுங்கள் என் ரசிகர்களை ஒன்றும் செய்யாதீர்கள்' என மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் வருத்தம் தெரிவித்தார்.

இதையும் படிக்க | விஜய்யின் வாரிசு இசை வெளியீட்டு விழா: பரபரப்பாக தயாராகும் மேடை... கியூட்டாக வந்த ராஷ்மிகா... பட்டைய கிளப்பும் தமன்

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் தமன் தலைமையில் தற்போது பாடல்கள் மேடையில் பாடப்பட்டுவருகின்றன. பாஸ் ரிட்டர்ன்ஸ் என்ற பாடலை அனிருத் பாடவிருக்கிறார். படத்தில் இப்பாடல் தீம் மியூசிக்காக இடம் பெறும் என்று கூறப்படுகிறது.

மேலும் பூங்கொடி பூபதி என்ற பாடல் ஆள் தோட்ட பூபதி பாடலின் ரீமிக்ஸ் என்று கூறப்படுகிறது. ஆள்தோட்ட பூபதி பாடலையும் ஷங்கர் மகாதேவனே பாடியிருந்தார். முன்னதாக  இசையமைப்பாளர் தமன் ஒத்திகையில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

First published:

Tags: Actor Vijay, Actress Rashmika Mandanna, Varisu