• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நடிகரின் பண்ணை வீட்டில் சூதாட்டம் - 26 பேர் கைது!

நடிகரின் பண்ணை வீட்டில் சூதாட்டம் - 26 பேர் கைது!

நாக சௌரியா

நாக சௌரியா

போலீஸ் சூதாட்டம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். நாக சௌரியா கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பிரபல இளம் நடிகரின் பண்ணை வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 26 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். நடிகரும் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தெலுங்கின் வளர்ந்து வரும் இளம் நடிகர் நாக சௌரியா. இவர் தமிழில் .எல்.விஜய் இயக்கிய தியா படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் வருடு காவலேனு திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. சமந்தா நடித்த , பேபி படத்திலும் நாக சௌரியா நடித்திருந்தார். தற்போது லக்ஷையா உள்பட ஐந்து தெலுங்குப் படங்களில் இவர் நடித்து வருகிறார். இவரது பண்ணை வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 26 பேர் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஆந்திர போலீசார், பண்ணை வீடு ஒன்றில் சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அந்த வீட்டில் சோதனையிட்டனர். அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 26 பேரை கைது செய்தனர். தொடர்ந்த விசாரணையில், அந்த வீடு நடிகர் நாக சௌரியாவுக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. சூதாட்டத்தில் அவருக்கும் தொடர்பு உண்டா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also read... முதல்நாளே இணையத்தில் வெளியான அண்ணாத்த... அதிர்ச்சியில் படக்குழு!

அதேநேரம், இந்த பண்ணை வீடு நாக சௌரியாவுக்கு சொந்தமானதல்ல, அவர் வேறொருவரிடமிருந்து லீசுக்கு எடுத்தது என நாக சௌரியாவின் தரப்பு விளக்கமளித்துள்ளது. அந்த பண்ணை வீடு நாக சௌயரியாவுக்கு சொந்தமானதில்லை என்றாலும், லீசுக்கு எடுத்தவர் என்ற முறையில் அங்கு நடந்த சட்டவிரோத செயல்களுக்கு அவரே பொறுப்பாவார்

போலீஸ் சூதாட்டம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். நாக சௌரியா கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: