முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா மீது வழக்கு!

நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா மீது வழக்கு!

நித்யா

நித்யா

மாதவரம், சாஸ்திரி நகர், எக்ஸ்டென்ஷன் இரண்டாவது குறுக்கு சாலை பகுதியில் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்தியா வசித்து வருகிறார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஓய்வு பெற்ற ஆசிரியரின் காரை கல்லால் தாக்கி உடைத்த விவகாரத்தில் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மாதவரம், சாஸ்திரி நகர், எக்ஸ்டென்ஷன் இரண்டாவது குறுக்கு சாலை பகுதியில் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்தியா வசித்து வருகிறார்.

இவருக்கும் எதிர் வீட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. எதிர் வீட்டில் இருக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியருடன் அடிக்கடி சண்டையிட்டு வந்த நடிகர் தாடி பாலாஜி மனைவி நித்தியா நேற்றிரவு எதிர் வீட்டு உரிமையாளரின் காரை கற்களால் சேதப்படுத்தி உள்ளார்.

இதனால் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் மாதவரம் போலீசார் நடிகர் தாடி பாலாஜி மனைவி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பிறர் சொத்துக்கு சேதம் விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாதவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின் மாதவரம் போலீசாரால் தாடி பாலாஜி மனைவி நித்யா கைது செய்யப்பட்டு பின்னர் காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

Also read... TITLE WINNER அல்ல... TOTAL WINNER... பிக்பாஸ் விக்ரமன் குறித்து திருமாவளவன் நெகிழ்ச்சி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Entertainment