Home /News /entertainment /

கதாநாயகியாக வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி துணை நடிகைக்கு பாலியல் தொல்லை - ஒளிப்பதிவாளர் கைது

கதாநாயகியாக வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி துணை நடிகைக்கு பாலியல் தொல்லை - ஒளிப்பதிவாளர் கைது

காசிநாதன்

காசிநாதன்

கொளத்தூரை சேர்ந்த 22 வயதான துணை நடிகை அளித்த புகாரின் பேரில் சின்னத்திரையில் ஒளிப்பதிவாளராக வேலை செய்து வரும் காசிநாதனை போலீசார் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தனர்.

  • News18
  • Last Updated :
கதாநாயகியாக வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி துணை நடிகையை வீட்டிற்கு அழைத்து மது குடிக்க வைத்து பாலியல் தொல்லை கொடுத்த ஒளிப்பதிவாளரை போலீசார் கைதுசெய்தனர். 

கொளத்துாரை சேர்ந்த 22 வயது பெண் சின்னத்திரையில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இதன் மூலமாக சின்னத்திரையில் ஒளிப்பதிவாளராக வேலை செய்து வரும் வளசரவாக்கம், ஓம் சக்தி நகர் பிரதான சாலையை சேர்ந்த காசிநாதன்(42), என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தொலைக்காட்சி தொடரில் கதாநாயகி வாய்ப்பு வாங்கி தருவதாகவும், அதை பற்றி பேச அப்பெண்ணை தனது வீட்டிற்கு இரவு நேரத்தில் அழைத்துள்ளார். அவரது வீட்டில் வைத்து இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த பெண்ணை காசிநாதன் பாலியல் தொல்லை செய்துள்ளார். இதையடுத்து அப்பெண் தனது நண்பரை தொடர்பு கொண்டு தன்னிடம் காசிநாதன் தவறாக நடந்துக்கொள்வதாகவும், தான் இருக்கும் இடம் குறித்து தெரிவித்துள்ளார்.

Also read... கைதியின் காதலியில் அண்ணன், தங்கையாக நடித்த நட்சத்திர தம்பதி!

இதையடுத்து அங்கு சென்ற அவரது நண்பர் பெண்ணை மீட்டார். இதுகுறித்து அந்த பெண் புகார் அளித்ததின் பேரில் வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் காசிநாதனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Crime News

அடுத்த செய்தி