Home /News /entertainment /

டம்மி துப்பாக்கிகளுக்கு பிரச்னை கொடுக்கும் காவல்துறை... நடவடிக்கை எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

டம்மி துப்பாக்கிகளுக்கு பிரச்னை கொடுக்கும் காவல்துறை... நடவடிக்கை எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

டம்மி ஆயுதங்கள் கொண்டு செல்வவதற்குரிய நடைமுறைகளை வகுக்க கோரி 2014ம் ஆண்டு விண்ணப்பம் அளிக்கப்பட்டது. அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

    திரைப்பட படப்பிடிப்புக்கு தேவையான டம்மி ஆயுதங்களை எந்தவித இடையூறுமின்றி கொண்டு செல்ல ஏதுவாக உரிய நடைமுறைகளை வகுக்க காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி தென் இந்திய திரைப்பட டம்மி எபக்ட்ஸ் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு, காரைக்குடியில் நடைபெற்ற போது, படப்பிடிப்புக்கு தேவையான டம்மி துப்பாக்கிகளை உதவி இயக்குனர் விக்டர் என்பவர் கொண்டு சென்றார்.

    அவரிடம் இருந்து இந்த டம்மி துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள கிடங்கிலிருந்து 150 டம்மி துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதையும் படிங்க : Dhanush Aishwarya: பெருமைக்குரிய மனைவி எனக் குறிப்பிட்ட 3 மாதத்திற்குள் தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா

    இதையடுத்து படப்பிடிப்புக்கு பயன்படுத்தும் டம்மி ஆயுதங்களை கொண்டு செல்வதற்குரிய நடைமுறைகளை வகுக்க காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி தென் இந்திய திரைப்பட டம்மி எபக்ட்ஸ் சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

    அந்த மனுவில், டம்மி ஆயுதங்கள் கொண்டு செல்வவதற்குரிய நடைமுறைகளை வகுக்க கோரி 2014ம் ஆண்டு விண்ணப்பம் அளிக்கப்பட்டதாகவும், அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க :  Dhanush: தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவுக்கு இது தான் காரணமா? 

    சமீபத்தில் மும்பை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மும்பை போலீசார், டம்மி ஆயுதங்களுக்கு எண்ணிட்டு, உரிமம் வழங்கும் நடைமுறையை வகுத்துள்ளதாகவும், அதேபோல தமிழகத்தில் டம்மி ஆயுதங்களுக்கு உரிமங்கள் வழங்குவதுடன், தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Gun, Kollywood

    அடுத்த செய்தி