ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்… ஆபாச பட வழக்கில் நடவடிக்கை

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்… ஆபாச பட வழக்கில் நடவடிக்கை

மனைவி ஷில்பா ஷெட்டியுடன் ராஜ் குந்த்ரா

மனைவி ஷில்பா ஷெட்டியுடன் ராஜ் குந்த்ரா

குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ராஜ் குந்த்ரா, பிஸ்னஸ் போட்டி காரணமாக தான் வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஆபாச படங்களை தயாரித்தது தொடர்பான வழக்கியில் சிக்கியிருக்கும் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதனால் அவருக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

  லண்டனை சேர்ந்த ராஜ் குந்த்ரா பிரபல நடிகை ஷில்பாஷெட்டியை கடந்த 2009-ல் திருமணம் முடித்தார்.இவர்களுக்கு வியான், திலீனா, சமிஷா ஆகிய குழந்தைகள் உள்ளனர். பிஸ்னஸ் மேனாக வலம் வந்த ராஜ் குந்த்ரா ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வாங்கியதன் மூலமாக மீடியா வெளிச்சத்திற்கு வந்திருந்தார்.

  இந்த நிலையில் மாடல் அழகிகளை ஆபாச படம் எடுத்து ஓடிடியில் விற்றதாக எழுந்த புகாரின் பேரில் ராஜ் குந்த்ராவை கடந்த ஜூலை 19-ஆம் தேதி மும்பை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் நடிகைகள் பூனம் பாண்டே, ஷெர்லின் சோப்ராவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

  லிவ்இன் ரிலேஷன்ஷிப்.. காதலிக்கு ரூ.100 கோடி வீடு பரிசு..? - ஹிருத்திக் சொல்வது என்ன.?

  ஆபாச படங்களுக்கென தனி மொபைல் ஆப்-ஐ உருவாக்கி அதில் தொடர்ச்சியாக படங்களை ராஜ்குந்த்ரா பதிவிட்டு வந்ததாக போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர். விசாரணை ஓராண்டுக்கும் மேலாக நடந்து வந்த நிலையில் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  450 பக்கங்கள் கொண்ட இதில், 5 ஸ்டார் ஓட்டலில் ஆபாச படங்களை எடுக்கப்பட்டு அவை ராஜ் குந்த்ராவின் நிறுவனத்தின் உதவியோடு தயாரிக்கப்பட்ட மொபைல் ஆப்களில் வெளியிடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வகைக்காக ராஜ்குந்த்ராவின் நிறுவனம் ஒர குறிப்பிட்ட தொகையை வசூலித்திருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

  லஜ்ஜாவதியே இசை.. ரீல்ஸில் வைரலாகும் தெம்மா தெம்மா பாடல்.. திடீர் வைரலுக்கு என்ன காரணம்?

  இதையடுத்து, ராஜ் குந்த்ராவுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அவர், பிஸ்னஸ் போட்டி காரணமாக தான் வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Bollywood