ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நடிகர் பவன் கல்யாண் மீது போலீசார் வழக்குப்பதிவு… விதிகளை மீறி கார் பேரணி நடத்தியதால் நடவடிக்கை…

நடிகர் பவன் கல்யாண் மீது போலீசார் வழக்குப்பதிவு… விதிகளை மீறி கார் பேரணி நடத்தியதால் நடவடிக்கை…

நடிகர் பவன் கல்யாண்

நடிகர் பவன் கல்யாண்

சினிமா பட காட்சிகளுக்கு இணையாக பவன் கல்யாண் காரில் சென்றது அவரது ரசிகர்களை கவர்ந்தாலும், விதிகளை மீறி கார் பேரணி நடத்தியதாக புகார்கள் எழுந்தன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விதிகளை மீறி கார் பேரணியை நடத்திய தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில், சாலைப் பணிகளுக்காக வீடுகள் இடிக்கப்பட்டதை நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் சொல்ல ஜனசேன கட்சி தலைவர் பவண் கல்யான் கடந்த வாரம் சென்றார்.

  அப்போது அவர் சினிமா பட பாணியில் காரின் மேற்கூரை மீது அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்தார். இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் ஆதரவாளர்கள் பின் தொடர்ந்தனர். இந்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

  பவன் கல்யாணின் செயலால் கடுப்பான போலீசார், அவரை தடுக்க முயன்றனர். சிறிது தூரம் முன் அவரது வாகனத்தை நிறுத்தி அவரை கீழே இறக்கினர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சில கிலோ மீட்டர் நடந்தே சென்றுள்ளார் பவண் கல்யான்.

  WATCH – கதிர், நரேன், கயல் ஆனந்தி நடித்துள்ள யூகி படத்தின் ட்ரெய்லர்

  சினிமா பட காட்சிகளுக்கு இணையாக பவன் கல்யாண் காரில் சென்றது அவரது ரசிகர்களை கவர்ந்தாலும், விதிகளை மீறி கார் பேரணி நடத்தியதாக புகார்கள் எழுந்தன. இந்த நடவடிக்கை மூலம் தங்களது ரசிகர்களை பவன் கல்யான் தவறாக வழி நடத்துகிறார் என்று விமர்சனங்கள் எழுந்தன.

  லவ் டுடே இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்!

  இந்த நிலையில், பி. சிவக்குமார் என்பவர் அளித்துள்ள புகாரின் பேரில் ஐதராபாத் போலீசார் பவன் கல்யாண் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  சிவக்குமார் தனது புகார் மனுவில், ‘பவன் கல்யாண் மற்றும் அவரது கார் டிரைவரின் அபாயகரமான பயணம் காரணமாக, நான் எனது பைக்கிலிருந்து தடுமாறி விழுந்து விட்டேன். காரின் கூரை மீது பவன் கல்யாண் இருந்தபோதிலும், டிரைவர் படு மோசமாக காரை ஓட்டினார். பின்னால் வந்தவர்களும் பவன் கல்யாண் காரை பின் தொடர்ந்து அதிவேகத்தில் சென்றார்கள்.’ என்று கூறியுள்ளார்.

  பவன் கல்யாண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் மீது விசாரணை விரைவில் தொடங்கவுள்ளது.

  Published by:Musthak
  First published:

  Tags: Pawan Kalyan