விஷால் அலுவலகத்தில் ரூ.45 லட்சம் கையாடல் விவகாரம் - பெண் கணக்காளர் மீது போலீஸ் வழக்குப் பதிவு

விஷால் அலுவலக பெண் கணக்காளர் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

விஷால் அலுவலகத்தில் ரூ.45 லட்சம் கையாடல் விவகாரம் - பெண் கணக்காளர் மீது போலீஸ் வழக்குப் பதிவு
விஷால் - பெண் ஊழியர் ரம்யா
  • Share this:
விஷால் ஃபிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் விஷால் பல படங்களைத் தயாரித்திருக்கிறார். இந்நிறுவனம் தொழிலாளர்களுக்கு கட்ட வேண்டிய டிடிஎஸ் தொகையைக் கட்டவில்லை என்று விஷால் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

இந்த விவகாரங்களைக் கவனிக்க வந்த கணக்காளர் ரம்யா, தொழிலாளர் டிடிஎஸ் தொகையிலிருந்து ரூ.45 லட்சம் பணத்தை முறைகேடாக தனது கணவர் தியாகராஜன் மற்றும் உறவினர்களின் வங்கிக் கணக்கில் மாற்றிக் கொண்டு தலைமறைவானதாக விஷால் பிலிம் ஃபேக்டரி தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் கடந்த 3-ம் தேதி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அந்தப் புகாரில், 2016-ம் ஆண்டு முதல் விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனத்தில் ரம்யா என்பவர் கணக்காளராகப் பணிபுரிந்து வருவதாகவும், விஷால் பிலிம் ஃபேக்டரி சார்பில் கடந்த 5 ஆண்டுகளாக வருமான வரித்துறைக்குச் செலுத்தச் வேண்டிய டிடிஎஸ் தொகையை அவர் செலுத்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் டிடிஎஸ் தொகையினை தனது கணக்கிலும், கணவர், உறவினர் கணக்கிலும் பரிமாற்றம் செய்துவிட்டு, நிறுவனத்திடம் டிடிஎஸ் தொகையினைக் கட்டிவிட்டதாகப் போலி ஆவணங்களையும், வங்கி விவரங்களையும் காட்டி மோசடி செய்ததாகப் புகார் மனுவில் ஹரிகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இதுமட்டுமின்றி ஆஃபிஸ் இ-மெயில் முகவரி மற்றும் அலுவலக கணிணியில் இருக்கும் முக்கியமான ஃபைல்களை அழித்துவிட்டதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஹரிகிருஷ்ணனின் இந்தப் புகாரை அடுத்து அலுவலக ஊழியர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்திய விருகம்பாக்கம் போலீஸ், பெண் கணக்காளர் ரம்யா மீது ரம்யா மீது மோசடி, போலி ஆவணங்களை தாயரித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
First published: July 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading