செல்போனில் பெண்ணிடம் தகாத முறையில் பேசிய நடிகர் மீது வழக்குப்பதிவு

வினாயகனின் இச்செயலை ஃபேஸ்புக்கில் பதிவிட்டதோடு மட்டுமின்றி போலீசிலும் புகார் அளித்தார் மிருதுளா சசிதரன்.

news18
Updated: June 15, 2019, 1:23 PM IST
செல்போனில் பெண்ணிடம் தகாத முறையில் பேசிய நடிகர் மீது வழக்குப்பதிவு
(Representative Image. Reuters)
news18
Updated: June 15, 2019, 1:23 PM IST
செல்போனில் பெண் ஒருவரிடம் தகாத முறையில் ஆபாசமாக பேசியதாக  நடிகர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சமூக செயற்பாட்டாளரான மிருதுளா சசிதரன் என்பவர் கடந்த 3-ம் தேதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளார். அதில் நடிகர் வினாயகனை ஒரு நிகழ்ச்சிக்காக செல்போனில் அழைத்த போது அவர் தன்னிடம் தகாத வார்த்தைகளால் பேசியதாக பதியப்பட்டுள்ளது.  வினாயகனின் இச்செயலை ஃபேஸ்புக்கில் பதிவிட்டதோடு மட்டுமின்றி போலீசிலும் புகார் அளித்தார் மிருதுளா சசிதரன். மேலும் வினாயகனுடனான செல்போன் உரையாடலையும் காவல்துறையில் ஆதாரமாக சமர்பித்துள்ளார்.

இதையடுத்து நடிகர் வினாயகனை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்நிலையில் மிருதுளா கொடுத்த புகாரின் அடிப்படையில் கல்பேட்டா பகுதி போலீசார் வினாயகன் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக வலரும் வினாயகன், தனுஷ் நடித்த மரியான், சிம்புவுடன் சிலம்பாட்டம், விஷாலின் திமிரு உள்ளிட்ட ஒரு சில தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களிலும் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ பார்க்க: நடிகர் சங்க தேர்தலில் இடியாப்ப சிக்கல்! ரத்தாகிறதா நடிகர் சங்க தேர்தல்?

First published: June 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...