நடிகர் கருணாகரன் மீது கமிஷனர் அலுவலகத்தில் கொலை மிரட்டல் புகார்

வட்டிக்கு பணம் கொடுப்பதை தொழிலாகக் கொண்ட இருவரது தொழில் பேட்டியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் ’பொது நலன் கருதி' படத்தில் நடிகர் சந்தோஷ், அருண் ஆதித், கருணாகரன், அனுசித்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

news18
Updated: February 9, 2019, 2:07 PM IST
நடிகர் கருணாகரன் மீது கமிஷனர் அலுவலகத்தில் கொலை மிரட்டல் புகார்
நடிகர் கருணாகரன்
news18
Updated: February 9, 2019, 2:07 PM IST
கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகர் கருணாகரன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பொதுநலன் கருதி பட இயக்குநர் மற்றும் இணை தயாரிப்பாளர் புகார் அளித்துள்ளனர்.

சீயோன் இயக்கத்தில் கடந்த 7-ம் தேதி வெளியான படம் பொது நலன் கருதி. வட்டிக்கு பணம் கொடுப்பதை தொழிலாகக் கொண்ட இருவரது தொழில் பேட்டியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நடிகர் சந்தோஷ், அருண் ஆதித், கருணாகரன், அனுசித்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இயக்குனர் சீயோன், படத்தின் இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்த் ஆகியோர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கருணாகரன் மீது புகார் அளித்துள்ளனர்.

அந்தப் புகாரில் கருணாகரன் படத்தில் நடிக்க ரூ. 25 லட்சம் முழுமையாக பெற்றுக்கொண்ட பிறகு பின்னணி குரல் கொடுத்ததாகவும், பின்னர் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் புரமோஷன் உள்ளிட்டவற்றிற்கு அழைத்த போது வரவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது இயக்குநர் சீயோன் கருணாகரன் வராதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். இதற்கு கருணாகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்ததோடு இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்திற்கும் அலைபேசியில் அழைத்து மிரட்டல் விடுத்துள்ளார். எனவே தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இயக்குநர் சீயோன் செய்தியாளர்களை சந்திக்கும்போது, ஏற்கனவே கந்துவட்டிக்காரர்களால் படத்தை வெளியிட சிக்கல்களை சந்தித்ததாகவும், தற்போது கந்து வட்டிக்காரர்கள் மிரட்டும் தொனியிலேயே கருணாகரன் மிரட்டுவதாகவும் தெரிவித்தார்.

தங்களை போன்ற எளிய பின்புலத்தில் இருந்து வருபவர்கள் முன்னேற பல தடைகள் இருப்பதாகவும் தெரிவித்த அவர், இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மற்றும் நடிகர் சங்க தலைவர் நாசர் ஆகியோரிடம் முறையிட உள்ளதாகவும் கூறினார்.
Loading...
'ஒரு அடார் லவ்’ ப்ரியா வாரியரின் ப்ரோமோஷன் ஸ்டைல்!

கமல்ஹாசன் ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது... - வாகை சந்திரசேகர் எச்சரிக்கை - வீடியோ

First published: February 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...