• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Vikram: கமலின் ’விக்ரம்’ படப்பிடிப்புக்கு போலீஸ் கமிஷனர் அனுமதி மறுப்பு

Vikram: கமலின் ’விக்ரம்’ படப்பிடிப்புக்கு போலீஸ் கமிஷனர் அனுமதி மறுப்பு

கமல் ஹாசன்

கமல் ஹாசன்

விக்ரம் படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டது அரசியல் காழ்ப்புணர்வு என்கிறார்கள் நடிகர் கமலின் ரசிகர்கள்.

  • Share this:
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்புக்கு போலீஸ் கமிஷனர் அனுமதி மறுத்துள்ள செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

    மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களைத் தொடர்ந்து கமல் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு படத்தின் அறிமுக டீஸரை வெளியிட்டனர். கமலின் அரசியல் அவுட்டிங் மற்றும் கொரோனா பெருந்தொற்றால் படப்பிடிப்பு தள்ளிப் போய், இந்த வருடம் சட்டமன்ற தேர்தல் முடிந்த பின் படப்பிடிப்பை தொடங்கினர். விஜய் சேதுபதி, பகத் பாசில் படத்தில் முக்கியமான வேடங்களை ஏற்றுள்ளனர்.

    மூன்று முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடிப்பதால் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. கமலின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் படத்தை தயாரிக்க, க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். நரேன், காளிதாஸ் ஜெயராம், ஆண்டனி வர்க்கீஸ் என படத்தில் மலையாள ஆள்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. தற்போது மலையாளத்தின் முன்னணி நட்சத்திரமாக செம்பன் வினோத்தும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

    விக்ரம் படத்தின் முக்கியமான காட்சிகளை சென்னை எக்மோரில் உள்ள போலீஸ் மியூஸியத்தில் நடத்த திட்டமிட்டிருந்தார் லோகேஷ் கனகராஜ். அதற்காக ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலின் புரொடக்ஷன் கன்ட்ரோலர் செந்தில், அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதியிருந்தார். அக்டோபர் 26, 27 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல், மாலை 6 மணிவரை படப்பிடிப்பு நடத்த கேட்டிருந்தனர். படப்பிடிப்புக்கான முன்தயாரிப்புக்கு அக்டோபர் 24, 25 தேதிகளில் அனுமதி தர வேண்டும் எனவும் தனது கடிதத்தில் கோரியிருந்தார்.

    Police commissioner denies permission for Kamal Haasan Vikram shooting, Kamal Haasan Vikram Movie, vikram shooting, vikram movie,  lokesh kanagaraj vikram movie, kamal haasan movies, kamal haasan upcoming movies,  கமல்ஹாசன் விக்ரம் திரைப்படம், நடிகர் கமல் ஹாசன், விக்ரம் திரைப்படம்,  லோகேஷ் கனகராஜ் விக்ரம் திரைப்படம், விக்ரம் படப்பிடிப்பு
    அனுமதி மறுப்பு


    ஆனால், அக்டோபர் 31 வரை பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு நீட்டித்திருப்பதை மேற்கோள் காட்டி, போலீஸ் கமிஷனர் படப்பிடிப்புக்கான அனுமதியை மறுத்தது தற்போது தெரிய வந்துள்ளது. நவம்பர் 1 முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் படப்பிடிப்புக்கு அனுமதி கோரப்படும் என தெரிகிறது. அதேநேரம், விக்ரம் படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டது அரசியல் காழ்ப்புணர்வு என்று கமல் ரசிகர்கள் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: