முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ''துன்பம் குழைத்த இன்பம்தான் காதல்...'' காதலர் தினம் முன்னிட்டு வைரமுத்து ட்வீட்!

''துன்பம் குழைத்த இன்பம்தான் காதல்...'' காதலர் தினம் முன்னிட்டு வைரமுத்து ட்வீட்!

வைரமுத்து

வைரமுத்து

காதலித்தவர்கள், காதலித்துத் தோற்றவர்கள், காதலில் ஜெயித்தவர்கள் என எல்லோருக்குமான பல காதல் பாடல்களை தனது எழுத்துகளில் பறைசாற்றியுள்ளார் வைரமுத்து.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகம் முழுவதும் இன்று பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் காதல் குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த 1980-ம் ஆண்டு தமிழ் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார்.

இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களில் பாடல்கள் எழுதியதன் மூலம் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார் வைரமுத்து.

ஒருகாலத்தில் காதலித்தவர்கள், காதலித்துத் தோற்றவர்கள், காதலில் ஜெயித்தவர்கள் என எல்லோருக்குமான பல காதல் பாடல்களை தனது எழுத்துகளில் பறைசாற்றியுள்ளார் வைரமுத்து. தற்போது வரை காதலர்கள் பலர் வைரமுத்துவின் வரிகளை பகிர்ந்து தங்களது காதலினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் காதலர் தினமான இன்று கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கவிதைய பதிவிட்டுள்ளார். அதில், ”எந்த நிலையிலும் வரலாம் எந்த வயதிலும் வரலாம் அது ஒன்றல்ல ஒன்றிரண்டு மூன்று நான்கென்று எண்ணிக்கை ஏறலாம் ஆனால், என்னதான் அது என்ற இருதயத் துடிப்புக்கும், எப்போதுதான் நேரும் என்ற உடலின் தவிப்புக்கும் இடைவெளியில் நேருகின்ற துன்பம் குழைத்த இன்பம்தான் காதல் அந்த முதல் அனுபவம் வாழ்க” என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Poet vairamuththu, Vairamuthu, Valentine's day