ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘இது மட்டும் நடந்தால் சினிமாவுக்கு பாட்டு எழுதுவதையே நிறுத்தி விடுகிறேன்’ – வைரமுத்து சுவாரசிய பேட்டி

‘இது மட்டும் நடந்தால் சினிமாவுக்கு பாட்டு எழுதுவதையே நிறுத்தி விடுகிறேன்’ – வைரமுத்து சுவாரசிய பேட்டி

வைரமுத்து

வைரமுத்து

தொலைக்காட்சி வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் வெளியே வாருங்கள். இயற்கையை கண்டு ரசியுங்கள். பறவைகளின் ஒலியை கேளுங்கள்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கவிப்பேரரசு வைரமுத்து தனது இலக்கிய அனுபவம், சினிமா பாடல்கள், திரைத்துறை சாதனைகள் உள்ளிட்டவை குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

  அந்தப் பேட்டியில் வைரமுத்து கூறியதாவது-

  எல்லோரும் சேர்ந்து என் தனிமையை காப்பாற்றிக் கொடுத்தால் அனைவருக்கும் நன்றி உடையவனாக இருப்பேன். அந்தக்காலத்தில் படைப்பாளிகள் முனிவர்களாக இருப்பார்கள். காட்டுக்கு போய் விடுவார்கள்.

  நான் இந்த டீசல் நாகரிகத்தில் ஈசல் போல அலைந்து கொண்டிருக்கிறேன். பொருள் ஈட்டுகிற வாழ்க்கைக்கு மத்தியில் நான் இலக்கியம் படைக்கிறேன்.

  இலக்கியம் மட்டும் படைத்துக் கொண்டிருங்கள் என்று என்னைச் சொன்னால் அந்த வாழ்வை நான் கொண்டாடுவேன். நான் ஒரு கவிதை நூலை வெளியிடுகிறேன். முதல் நாளிலேயே தமிழர்கள் ஒரு லட்சம் பிரதிகளை வாங்கிக் கொள்கிறார்கள் என்றால் நான் பாட்டு எழுதுவதையே நிறுத்தி விடுகிறேன்.

  யூஸான் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் கமலின் விக்ரம்…

  திரைப்படத்தில் பாட்டு எழுதுவதால் எனது ஆற்றல் சிதறுகிறது. கவிதைக்கான மையம் உடைகிறது. கவிதையை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும். பாரதியார் இருந்த காலத்தில் சினிமா இல்லை. அவரது காலத்தில் சினிமா இருந்தால் அவர் சினிமாவுக்கு வந்திருப்பார்.

  வானத்திற்கும் எனக்கும் ஓர் இயல்பான ஈர்ப்பு இருப்பதாக நினைக்கிறேன். என்னை பாட்டு எழுதுவதற்காக தயாரிப்பாளர்கள் வெளிநாடுகளுக்கு எல்லாம் அழைத்துச் செல்வார்கள்.அங்கு 7 நட்சத்திர விடுதியில் அறை அமைத்துக் கொடுப்பார்கள். அங்கு நான் வானம் தெரியுமா என்று அவர்களிடம் கேட்பேன். இல்லாவிட்டால் கீழேயுள்ள பூங்காவுக்கு அருகே உட்கார்ந்துகொண்டு பாட்டை எழுத ஆரம்பிப்பேன்.

  தமிழர்களின் அடையாளங்கள் பறிக்கப்படுவதாக வெற்றிமாறன் பேசியதற்கு சீமான் ஆதரவு… ராஜராஜ சோழன் குறித்து பரபரப்பு பேட்டி

  வானம் எனக்கு ஒரு மாற்று. வானம் எனக்கு ஒரு ஆற்றல். வானம் எனக்கொரு மகிழ்ச்சி. வானம் எனக்கொரு பரவசம். வானத்தின் மேகங்கள் மாறிக் கொண்டிருப்பதை பார்ப்பதில் எனக்கு அலாதி மகிழ்ச்சி.

  வானம் மாறாது. வந்து போகும் மேகங்கள் மாறும். வானத்தின் நிறங்கள் மாறும். காற்று மண்டலமும் சூரிய ஒளியும் கோலாட்டம் நடத்தும் போது வானத்தின் வண்ணங்கள் மாறும். மனிதர்கள் அதையெல்லாம் பார்க்க வேண்டும். நீங்கள் ஜன்னலையெல்லாம் மூடிக்கொண்டு தொலைக்காட்சியை பார்த்து கழிந்து முடிகிறீர்கள். வெளியே வாருங்கள்.

  தொலைக்காட்சி வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் வெளியே வாருங்கள். இயற்கையை கண்டு ரசியுங்கள். பறவைகளின் ஒலியை கேளுங்கள். வானத்தைப் பாருங்கள். இந்த இயற்கைக்கு உங்களது பங்களிப்பை கொடுங்கள். இயற்கையுடன் பேசுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Vairamuthu