இன்று தந்தை பெரியாரின் 143 வது பிறந்தநாள். அவரைக் குறித்து நாத்திகவாதிகளின் கருத்து என்ன என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆன்மிகவாதிகளின் மனதில் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இடம் எப்படியானது? பழுத்த ஆன்மிகவாதியான மறைந்த காவியக்கவிஞர் வாலி, பெரியார் குறித்து பல இடங்களில் பேசியுள்ளார்.
எழுத்தாளர் ஜெயந்தன் எழுதியிருக்கும் வாலிப வாலி புத்தகத்தில் , பெரியார் குறித்து வாலி சொல்லியிருப்பவை இடம்பெற்றுள்ளன . தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் வைப்பதற்குமுன் , அதாவது 50 வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது . வாலியே அதனை சுவாரஸியமாக விவரிக்கிறார் .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
" என் நண்பர் எம் . ஆர் . பாலு என்பவர் , ' பேராசை பிடித்த பெரியார் ' என்ற ஒரு சமூக நாடகத்தை எழுதி , அதில் என் சீடன் திருச்சி சௌந்தர்ராஜனை பெரியார் வேடத்தில் நடிக்க ஸ்ரீரங்கம் வாசுதேவ மன்றத்தில் நடந்த நாடகம் .
அந்த நாடகத்தில் பெரியகோவில் அர்ச்சகர் குண்டூசி ராமண்ணா என்பவரும் நடித்தார் . இதெல்லாம் அந்தக் காலத்தில் ஆஸ்திக மக்களிடையே கண்டனத்துக்குள்ளான விஷயம் .
தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என ஆசைப்பட்ட பெரியார் என்னும் பொருளில் , ' பேராசை பிடித்த பெரியார் ' என்று பெயர் வைக்கப்பட்டிருந்த அந்த நாடகத்தில் பெரியாரின் மேன்மைகளை குறித்து நான் ஒரு பாடல் எழுதி இருந்தேன் .
'இவர்தான் பெரியார், இவரை
எவர்தான் அறியார்?'
என்ற பாடல் அது . அந்த நாடகத்திற்கு தலைமைத் தாங்க வந்த பெரியாரிடம் என்னை சௌந்தர்ராஜனின் தந்தை ராஜகோபால் நாயுடு அறிமுகப்படுத்தினார் . நாடகத்தில் வரும் பாட்டை எழுதியவர் என்று அறிமுகப்படுத்த , ' பாட்டுன்னா இப்படித்தான் எல்லோர்க்கும் புரியும்படி எளிமையா இருக்கணும் . இப்ப நாட்டுக்கு உப்யோகமில்லாத பாட்டெல்லாம் சினிமாவில் வருது ' என்றெல்லாம் பெரியார் பேசியதாக என் ஞாபகம் . இதுதான் பெரியாரோடு நடந்த என் முதல் சந்திப்பு . அதன் பின்பு சூரியகாந்தி பட நூறாவது நாள் விழாவில் பெரியார் கையால் கேடயம் வாங்கினேன் .
அன்றைக்கு நடந்த சுவையான நிகழ்ச்சி என்னவென்றால் பெரியார் முன்வரிசையில் ஜமக்காளம் விரித்து அமர , அவர் பிரியமாக வளர்த்துவரும் நாயும் அவர் அருகில் படுத்திருந்தது . நாடகம் தொடங்கி பெரியார் வேடத்தில் சௌந்தர்ராஜன் வந்ததும் , பாடகர் பொன்மலை பக்கிரிசாமி என்பவர் இவர்தான் பெரியார் என்று பாடத் தொடங்கியதும் , பெரியார் பக்கத்தில் படுத்திருந்த நாய் ஒரே பாய்ச்சலாக மேடைக்கு தாவி சௌந்தர்ராஜனின் வேட்டியை பற்றி இழுத்தது . சௌந்தர்ராஜன் திகைக்க , அதன்பின் பெரியார் கைத்தடியை நீட்டி நாயின் பெயர் சொல்லி அழைக்க , அது மீண்டும் மேடையிலிருந்து தாவி முன்வரிசைக்கு வந்து பெரியாருக்கு அருகே படுத்துக் கொண்டது ."
Also read... எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை தயாரிக்கும் தாணு...!
வாலி சொல்லும் தகவலில் இருந்து கோவில் அர்ச்சகர் குண்டூசி ராமண்ணா என்பவர் பெரியார் குறித்த நாடகத்தில் நடித்துள்ளார் , சமூக சீர்த்திருந்த கருத்துகளை பேசியுள்ளார் . அன்று கோவில் அர்ச்சகர்களும் பெரியார் கொள்கைகளை பரப்புகிறவர்களாக இருந்துள்ளனர் .
பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக கொண்டாடுவது சாலப்பொருத்தம் என்பதை வாலியின் இந்தப் பதிவு ஓங்கி சொல்கிறது . Published by: Vinothini Aandisamy
First published: September 17, 2021, 10:53 IST
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.