ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கண்ணதாசனின் ‘மயக்கமா கலக்கமா’ பாடலை சிலாகித்து புகழ்ந்த வாலி… இவ்வளவு அர்த்தம் இந்த பாடலில் இருக்கிறதா?

கண்ணதாசனின் ‘மயக்கமா கலக்கமா’ பாடலை சிலாகித்து புகழ்ந்த வாலி… இவ்வளவு அர்த்தம் இந்த பாடலில் இருக்கிறதா?

கண்ணதாசன் - வாலி

கண்ணதாசன் - வாலி

ஒரு பைபிள், பகவத் கீதை, குர்ஆன் எல்லாவற்றிலுமே சாராம்சமும் இந்தப் பாடலில் இடம் பெற்றுள்ளது. - வாலி

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கண்ணதாசன் எழுதிய மயக்கமா கலக்கமா என்ற பாடலை கவிஞர் வாலி சிலாகித்து பாராட்டி அதன் அர்த்தங்களை விவரித்துள்ளார்.

  கவிஞர் வாலி  அளித்த பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலானது. அதில் பேசிய வாலி,

  பாடகர் பி.பி. ஸ்ரீனிவாசிடம், சமீபத்தில் என்ன பாடலை பாடினார்கள் என்று கேட்டேன். அவர் சுமைதாங்கி படத்தில் ஒரு பாடலை பாடி உள்ளேன் என்று கூறி ‘மயக்கமா கலக்கமா’ என்ற பாடலை என்னிடம் பாடிக் காட்டினார்.

  அந்த பாட்டை கேட்ட உடனேயே நான் மதுரைக்கு செல்லவிருந்த பயணத்தை உடனடியாக ரத்து செய்தேன். அந்தப் பாடல் மிக அற்புதமாக இருக்கும். பின்னாளில் நான் கண்ணதாசனிடம் கூறினேன்;  நான் உங்களுக்கு எதிரியாக வந்து இருப்பதாக நீங்கள் நினைத்தால் அதற்கு இந்த ‘மயக்கமா கலக்கமா’ என்ற உங்களுடைய பாடல் தான் காரணம் என்று கண்ணதாசனிடம் தெரிவித்தேன்.

  வாழ்க்கையில் இன்னும் வெற்றி பெறாமல், மனம் கலங்கிப்போய் இருக்கக்கூடிய ஒரு ஆள் இந்த பாடலை கேட்டால் அவர்களுக்கு உற்சாகம் பிறக்கும். ‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்’ என்ற வரி அதில் இடம்பெற்றிருக்கும்.

  ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் தொடர்புபடுத்தி எப்படி பாடலை எழுத வேண்டும் என்பதற்கு, இந்தப் பாடல் ஒரு உதாரணம். ‘வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி இருந்தால் மாறுவதில்லை; எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதிவரைக்கும் அமைதி இருக்கும்’ என்று அற்புதமாக இந்த பாடலை கண்ணதாசன் எழுதியிருப்பார். ஏழை மனதை மாளிகையாக்க சொல்வார் கண்ணதாசன்.

  ஏழை மனதை மாளிகை ஆக்க எதற்காக காசு வேண்டும்? இதற்கு எந்த பணமும் தேவை இல்லையே. மனதை மாளிகை ஆக்கி சாப்பாட்டுக்கு என்ன செய்வது? என்று கேட்கலாம்.

  அதற்குத்தான் அடுத்த வரியில் கண்ணதாசன் எழுதுகிறார், ‘நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு’ என்கிறார் கண்ணதாசன்.

  ரூ. 6 கோடிக்கு விற்பனையான ‘மாவீரன்’ படத்தின் பாடல் வெளியீட்டு உரிமை…

  ஓகே. நாளைய பொழுதை இறைவனுக்கு அளித்து விட்டால் எப்போது பொழுது விடிவது? அதுவரை எப்படி நிம்மதி தேடுவது? என்று கேட்கலாம்.

  அதற்கு தான் அடுத்த வரியில் கண்ணதாசன் பதில் அளிக்கிறார்.  ‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி. நினைத்து பார்த்து நிம்மதி நாடு’ என்கிறார் கண்ணதாசன். இது ஒரு அற்புதமான பாட்டு. ஒரு பைபிள், பகவத் கீதை, குர்ஆன் எல்லாவற்றிலுமே சாராம்சமும் இந்தப் பாடலில் இடம் பெற்றுள்ளது.

  இவ்வாறு வாலி கூறினார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Kollywood