Home /News /entertainment /

'நயன்தாரா' என்பதின் தமிழ் அர்த்தம் என்ன? அலறவிட்ட கவிஞர் | வைரல் போஸ்ட்

'நயன்தாரா' என்பதின் தமிழ் அர்த்தம் என்ன? அலறவிட்ட கவிஞர் | வைரல் போஸ்ட்

நயன்தாரா என்ற பெயர் தமிழ் பெயரில்லை.

நயன்தாரா என்ற பெயர் தமிழ் பெயரில்லை.

Nayanthara: நடிகை நயன்தாராவின் பெயரைத் தமிழ் படுத்தி எப்படி அழைப்பது என்ற விவாதமும் அதற்கு கவிஞர் ஒருவர் கொடுத்துள்ள விவரமும் வைரலாகி வருகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின் பெயர் தமிழ் சொற்களால் ஆனதில்லை அதனால்  'நயன்தாரா' என்பதை தமிழ்ப்படுத்தி எப்படி அழைப்பது என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது.

    'டிரண்ட்' என்ற ரீதியில் சில விஷயங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டும், ஷேர் செய்யப்பட்டும் வருகின்றன. அதே போல் சில விவாதங்களும் அவ்வப்போது எழுந்து வருகின்றன.

    அந்த வகையில் தற்போது நயன்தாரா என்ற பெயர் தமிழ்ப்பெயர் கிடையாது. அதற்கான தமிழ்ப்பெயர் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

    Must Read: ஒரு கணம் ஒரு போதும் பிரிய கூடாதே! நயன்- விக்கி ஹனிமூன் போட்டோஸ் வைரல்

    அந்த கேள்விக்கான விடையாகக் கவிஞர் மகுடேஸ்வரன் 2015-ல் எழுதிய பேஸ்புக் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.

    நடிகை நயன்தாரா.


    2015-ம் ஆண்டு ஜூன் மாதம் மகுடேஸ்வரன் எழுதியுள்ள பதிவில், “நயன்தாரா’ என்னும் பெயர் தமிழ்ச்சொற்களால் ஆனதில்லை என்பதால் உரியத் தமிழ்ப்பெயர் கூறுக’ என்னும் நண்பரின் பதிவொன்றைப் பார்த்தேன். நயனம் என்றால் கண். தாரா (தாரகை) என்றால் நட்சத்திரம். சில நாள்களுக்கு முன்வரை நட்சத்திரம் என்பதற்கு உரியத் தமிழ்ப்பெயர் இல்லையோ என்று வருந்தியிருந்தேன். விண்மீன் என்பதும்கூட கவிதைப்பண்புள்ள உருவகப்பெயர்தான். உடுமலை என்ற ஊர்ப்பெயரை ஆராய்ந்தபோது உடு’ என்பது நட்சத்திரத்தைக் குறிக்கும் தமிழ்ச்சொல் என்பது தெரிந்தது. நயன்தாரா என்னும் பெயரைத் தமிழ்ப்படுத்தினால் ‘உடுக்கண்ணி’ என்று ஆகும்.” எனப் பதிவிட்டுள்ளார்.



    இனி நயன்தாராவை ‘உடுக்கண்ணி' என்றுதான் அழைக்கவேண்டுமா என நெட்டிசன்கள் பகடி செய்து வருகின்றனர்.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Facebook Post, Nayanthara, Viral

    அடுத்த செய்தி