ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சிம்புவின் பத்து தலயில் நடிக்கும் கவிஞர் மனுஷ்யபுத்திரன்...!

சிம்புவின் பத்து தலயில் நடிக்கும் கவிஞர் மனுஷ்யபுத்திரன்...!

கவிஞர் மனுஷ்யபுத்திரன்

கவிஞர் மனுஷ்யபுத்திரன்

சிம்பு வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பில் உள்ளார். அது முடிந்ததும் பத்து தல படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

கவிஞர் மனுஷ்யபுத்திரன் சிம்பு, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் பத்து தல படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.

கன்னடத்தில் வெற்றி பெற்ற முப்தி படத்தின் ரீமேக்காக பத்து தல உருவாகிறது. சில்லுன்னு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா மீண்டும் .ஆர்.ரஹ்மான், ஸ்டுடியோ கிரீனுடன் இணையும் படமாகவும் இது அமைந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. கௌதம் கார்த்திக் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவர் மற்றும் ப்ரியா பவானி சங்கர் சம்பந்தப்பட்ட காட்சிகளை கிருஷ்ணா படமாக்கினார். நேற்றைய படப்பிடிப்பில் கவிஞரும், திமுக பேச்சாளருமான மனுஷ்யபுத்திரன் கலந்து கொண்டார். இது குறித்து அவர் இணையத்தில் குறிப்பிட்டுள்ளார்

"பத்து தல படத்தில் ஒரு நடிகனாக எனது முதல் நாள் ஷீட் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருகிறேன். கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கருடன் இன்றைய முதல் நாள் படப்பிடிப்பு இருந்தது. ப்ரியா என் கவிதைகளை ஏராளம் வாசித்திருக்கிறார். அவை ஒரு தற்கொலை ஆல்பம் என்றார். இயக்குனர் கிருஷ்ணாவுடன் வேலை செய்வது மிகவும் நட்பார்ந்த அனுபவம். திரைக்குப்பின்னே எவ்வளவு மனிதர்கள், எவ்வளவு வாழ்க்கை, எவ்வளவு கனவுகள், எவ்வளவு கதைகள்

Also read... அருண் விஜய்யை கமர்ஷியல் ஸ்டாராக்கும் யானை - புகைப்படங்கள்!

மனச்சோர்வு மிக்க நீண்ட நாட்களுக்குப்பிறகு இந்த வேலை மீண்டும் மனதில் புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. நான் மீண்டு வருவேன். ஒரு நடிகனாக என்னை யோசித்ததேயில்லை. நடிக்கிறேன். என்னால் எதெல்லாம் முடியாதென்று நம்பப்படுகிறதோ அதையெல்லாம் செய்வேன்முதுகு வலிக்கிறது. சரியாகிவிடும். நாளை மறுபடி ஷீட். இரவு தாராவின் காதலர்கள் எழுதவேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

சிம்பு வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பில் உள்ளார். அது முடிந்ததும் பத்து தல படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Simbu