• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படப்பெயருக்கு எழுந்த அதிருப்தி

’ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படப்பெயருக்கு எழுந்த அதிருப்தி

ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்

ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்

எம்.ஜி.ஆர். என்னும் பெயரை நம்மவர்கள் 'எம்ஜார்' என்று பேச்சு வழக்கில் ஒலித்துச் செல்வதால் அவ்வாறே எழுதிக் காட்ட இயலுமா? அதுவும் ஒரு தலைப்பிலேயே செய்யக்கூடுமா?

  • Share this:
    சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கும் படம் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும். இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் என்பதன் பேச்சு வழக்கை அப்படியே தலைப்பாக்கியிருக்கிறார்கள். இது சரியல்ல என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் பிரபல கவிஞர் மகுடேஸ்வரன்.

    தூய தமிழில் மட்டுமே பேசி, எழுதி வருகிறவர் கவிஞர் மகுடேஸ்வரன். தமிழ் இலக்கணத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு முதலில் இவரைத்தான் அணுகுகிறார்கள். ஐயம் போக விளக்குவதில் வல்லவர். அவர் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் தலைப்பு குறித்து தனது கருத்தை எழுதியுள்ளார்.

    "'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' என்று ஒரு தலைப்பைப் பார்த்தேன். பேச்சில் என்ன தான் மாறுபாடு இருந்தாலும் இராமன், இராவணன் முதலான பெயர்ச்சொற்களை 'ராமே, ராவணே' என்று எழுதிக் காட்டமாட்டார்கள். வட்டார வழக்கில் உள்ள சொற்களை ஒலிப்பின்வழி எழுதுவோராயினும் பெயர்களைச் சிதைத்தெழுதுவதைத் தவிர்ப்பார்கள். அப்பெயர்களை ராம், ராவண் என்று எழுதியபின் ஏகாரத் தேற்றம் சேர்த்ததுபோல் (ராம் + ஏ ஆண்டாலும்) எடுத்துக்கொண்டால் தான் சற்றே ஆறுதல்பட முடிகிறது. முள்ளும் மலரும் படத்தில் பாடகர் பாடியபடியே பெயரிட்டிருக்கிறார்கள் என்று தான் நினைக்கிறேன். அந்தப் பாடலை எழுதிய கண்ணதாசன் ‘ராமே, ராவணே’ என்று எழுதியிருக்கமாட்டார். எம்.ஜி.ஆர். என்னும் பெயரை நம்மவர்கள் 'எம்ஜார்' என்று பேச்சு வழக்கில் ஒலித்துச் செல்வதால் அவ்வாறே எழுதிக் காட்ட இயலுமா? அதுவும் ஒரு தலைப்பிலேயே செய்யக்கூடுமா? இது அவ்வளவு நன்றாகவும் இல்லை, மெச்சத் தகுந்த போக்காகவும் இல்லை" என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Poet Magudeswaran, Raame Aandalum Raavane Aandalum, suriya, actor suriya, suriya 2d entertainment, suriya movies, சூர்யா, நடிகர் சூர்யா, சூர்யா 2 டி பொழுதுபோக்கு, சூர்யா திரைப்படங்கள், ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும், 2d entertainment movies, Raame Aandalum Raavane Aandalum movie, Raame Aandalum Raavane Aandalum film, ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரைப்படம்
    கவிஞர் மகுடேஸ்வரன்


    ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தை அரிசில் மூர்த்தி எனபவர் இயக்கியுள்ளார். மிதுன் மாணிக்கம், ரம்யா பாண்டியன், வாணி போஜன் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். க்ரிஷ் இசையமைக்க, சுகுமார் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். செப்டம்பர் 24 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் இப்படம் நேரடியாக வெளியாகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: