Home /News /entertainment /

சிவகார்த்திகேயனின் டான் படத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்… என்ன சொன்னார் தெரியுமா?

சிவகார்த்திகேயனின் டான் படத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்… என்ன சொன்னார் தெரியுமா?

பாமக நிறுவனர் ராமதாஸ் - சிவகார்த்திகேயன்

பாமக நிறுவனர் ராமதாஸ் - சிவகார்த்திகேயன்

Don Movie Ramadoss Review : சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்த நிலையில், டான் திரைப்படம் அதையும் தாண்டி வசூல் செய்திருக்கிறது.

    சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள டான் படத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் எழுதியுள்ளார். அவரது இந்த ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

    அட்லி உதவி இயக்குனரான சிபி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் எஸ் ஜே சூர்யா சமுத்திரக்கனி பிரியங்கா மோகன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வெளியான டான் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.

    கல்லூரி கலாட்டா திரைப்படமாக மட்டுமல்லாமல் ரசிகர்களை திரையரங்கில் கண்ணீர் விட்டு அழ செய்யும் அப்பா-மகன் செண்டிமெண்ட் திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்தது.

    இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களை தொடர்ந்து கேலி செய்து வரும் நிலையில் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு நம்பிக்கை தரும் திரைப்படமாக இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது.

    ’மீண்டும் உங்களை சந்திப்பேன்; என்னைப் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்’ – அமெரிக்கா புறப்படும் முன் டி.ஆர். கண்ணீர் மல்க பேட்டி 

    சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்த நிலையில், டான் திரைப்படம் அதையும் தாண்டி வசூல் செய்திருக்கிறது.

    லாரன்ஸ், வடிவேலு நடிப்பில் சந்திரமுகி – 2… அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

    தற்போது இந்த திரைப்படம் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் டான் படத்தை பார்த்து விட்டு ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.



    அவர் தனது ட்விட்டர்பதிவில், ‘நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் பார்த்தேன். “பெற்றோரை அவர்கள் இருக்கும் போதே கொண்டாடுங்கள் (Celebrate Your Parents When They Are With You)” என்ற பாடத்தை சொல்லும் அந்த திரைப்படம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்!’ என்று கூறியுள்ளார்.



    இந்த பதிவு ரீ ட்வீட் செய்துள்ள சிவகார்த்திகேயன், ராமதாஸின் பதிவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Dr Ramadoss, Sivakarthikeyan

    அடுத்த செய்தி