தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவில் ஒரு நடிகருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கெளரவமாக கருதப்படும் தாதா சாஹேப் பால்கே விருது இந்த வருடம் நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டரில் தெரிவித்தார். இந்த விருது தங்க தாமரை (கோல்டன் லோட்டஸ்) பதக்கம், ஒரு சால்வை மற்றும், 10,00,000 ரொக்கப் பரிசை உள்ளடக்கியது.
Rajinikanth: ‘தாமதம் என்றாலும் வரவேற்புக்குரியது’ ரஜினிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமான ரஜினி பின்னர் ‘பாட்ஷா’, ‘தளபதி’, ‘அண்ணாமலை’, ‘படையப்பா’, ‘சந்திரமுகி’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’ என பல பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்தார். தற்போது இயக்குநர் சிவாவின் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையே தாதா சாஹேப் பால்கே விருது பெற்றிருக்கும் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ”தலைமுறைகள் கடந்து பிரபலமாக இருப்பது, ஒரு சிலருக்கு பெருமை சேர்க்கலாம், மாறுபட்ட பாத்திரங்கள் மற்றும் அன்பான ஆளுமை ... அது தான் ரஜினிகாந்த் ஜி. தலைவருக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள்” என அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்