ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''அற்புதமான அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி'' - விஷாலுக்கு பதிலளித்த பிரதமர் மோடி!

''அற்புதமான அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி'' - விஷாலுக்கு பதிலளித்த பிரதமர் மோடி!

விஷால் - மோடி

விஷால் - மோடி

விஷாலின் ட்வீட்டுக்கு பிரதமர் மோடி இன்று பதில் ட்வீட் அளித்துள்ளார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழ் சினிமாவின் முன்னணி ஆக்‌ஷன் ஹீரோவான விஷால், தென்னிந்திய மாநிலங்கள் மட்டுமின்றி இந்தி பெல்ட்டிலும் மார்க்கெட் வைத்திருக்கும் சில நட்சத்திரங்களில் ஒருவர். அவரது அடுத்தப் படம் லத்தி. விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கும் இப்படம் போலீஸ் கதை களத்தில் இயக்கப்பட்டிருக்கிறது. அதோடு மார்க் ஆண்டனி படத்திலும் நடிக்கவிருக்கிறார். இது தவிர, துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்கி நடிக்கவிருக்கிறார் விஷால்.

  இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கங்கை நதி தொடர்பாக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்திருந்தார் விஷால். ட்விட்டரில் பதிவிட்டிருந்த விஷால், ''அன்புள்ள மோடி ஜி, நான் காசிக்குச் சென்றேன். அற்புதமான தரிசனம் / பூஜை செய்து, கங்கை நதியின் புனித நீரை தொட்டேன். கோவிலை புதுப்பித்து, அதை இன்னும் அற்புதமாகவும், எளிதாக எவரும் தரிசனம் செய்வதற்காக நீங்கள் செய்த மாற்றத்திற்காக கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களுக்கு தலை வணங்குகிறேன். வணக்கம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

  விஷாலின் ட்வீட்டுக்கு இன்று பதில் ட்வீட் அளித்த பிரதமர் மோடி, ''காசியில் உங்களுக்கு ஒரு அற்புதமான அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Actor vishal, PM Modi