''கெஞ்சி கேட்கிறேன்... இனி பேனர் கலாசாரம் வேண்டாம்'' - நடிகர் சூர்யா

''கெஞ்சி கேட்கிறேன்... இனி பேனர் கலாசாரம் வேண்டாம்'' - நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா
  • News18 Tamil
  • Last Updated: September 14, 2019, 10:02 PM IST
  • Share this:
தமிகத்தில் அனைவரும் கவலைப்டும் விதமாக ஒரு சம்பவம் நடந்து உள்ளதால் இனிமேலும் பேனர் கலச்சாரம் வேண்டாம் என நடிகர் சூர்யா கேட்டு கொண்டுள்ளார்.

காப்பான் திரைப்பட குழுவினர் சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா ,சமுத்திரகனி, தலைவாசல் விஜய், இயக்குனர் கே.வி.ஆனந்த் , நடிகை சாய்ஷா ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் கலந்து கொண்ட பேசிய நடிகர் சூர்யா, அனைவருக்கும் கவலையளிக்கும் விதமாக ஒரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது எனக்கூறினார்.


தனது ரசிகர்கள், இரத்த தானம் உள்ளிட்ட நல்ல விஷயங்கள் செய்து வருவதை கவனித்து வருவதாக கூறிய சூர்யா, படம் வெளியாகும் போது கொண்டாட்டத்தில் ஈடுபடும் ரசிகர்கள் பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். பேனர்கள் வைத்து தான் தன்னை கவனிக்க வைக்க வேண்டும் என்பதில்லை என்று கூறிய சூர்யா, பேனர் வைக்க வேண்டாம் என தான் அடிக்கடி கூறியிருப்பதாகவும், இனிமேலும் அது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை பள்ளிக்கரணை அருகே அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், அவரது மகன் திருமணத்துக்காக வைத்திருந்த பேனர் சரிந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்ற 23 வயது பெண் உயிரிழந்தார்.

இதை தொடர்ந்து அரசியல் தலைவர்கள், முன்னனி ஹீரோக்கள் பலர் அவர்களுக்கு கட்அவுட், பேனர் வைக்க வேண்டாமென தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றர்.Also Watch

First published: September 14, 2019, 9:49 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading